IND vs PAK WC 2023: ஜெட் வேகத்தில் ஹோட்டல் விலை; மருத்துவமனை படுக்கையை நாடும் ரசிகர்கள்: ஒரே கல்லில் 2 மாங்கா!
அகமதாபாத்தில் ஹோட்டல் விலை அதிகமாக இருக்கும் நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் மருத்துவமனை படுக்கைகளை முன்பதிவு செய்கின்றனர்.
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட உலகக் கோப்பை 2023 தொடர் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரையில் இந்தியாவில் நடக்கிறது. இதில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி அக்டோபர் 15 ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடக்கிறது. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை தொடர் மூலமாக ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடக்கிறது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை போட்டியைக் காண ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வரும் நிலையில், அகமதாபாத்தில் நட்சத்திர ஹோட்டல்களில் ஹோட்டல் விலையானது ரூ.50 ஆயிரம் வரையில் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ரசிகர்கள் மருத்துவமனை படுக்கைகளை முன்பதிவு செய்வதாக மருத்துவமனை வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்தடுத்து பவுண்டரி, ஆல் ஏரியாவுலேயும் ஹீரோவான ரவிச்சந்திரன் அஸ்வின்: இந்தியா 438க்கு ஆல் அவுட்!
ஒன்று அல்லது இரண்டு நாட்கள் இரவு மருத்துவமனையில் தங்கிக்கொள்ள ரசிகர்கள் விசாரிப்பதாக மருத்துவமனை அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும், இது ஒரு மருத்துவமனை என்பதால், ரசிகர்கள் தங்களது முழு உடல் பரிசோதனைக்காகவும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டியை பார்ப்பதற்காகவும் ஒரு இரவு தங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால், அவர்களது இரண்டு நோக்கங்களும் நிறைவேறுகின்றன.
சூர்யகுமார் யாதவ் அல்லது சஞ்சு சாம்சன் - யாருக்கு கேப்டன் வாய்ப்பு?
தங்குமிடத்திற்கான பணமும் மிச்சமாகிறது. அதோடு, உடல் நல பரிசோதனையும் செய்யப்படுகிறது என்று போபாலில் உள்ள சன்னித்யா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் பராஸ் ஷா கூறியுள்ளார்.
எனினும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை 2023 தொடருக்கான டிக்கெட்டுகள் இன்னும் வெளியிடப்படாத நிலையில், ரசிகர்கள் ஹோட்டல்களை முன்பதிவு செய்ய முடிவு செய்துள்ளனர். 10 மைதானங்களில் போட்டி நடப்பதால், ஹோட்டல்களில் அதிக விலை நிர்ணயிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. மேலும், பல ஹோட்டல்களில் முன்பதிவும் முடிந்துவிட்டதாகவும் கூறப்பட்டது.
இதன் காரணமாக ரசிகர்கள் மருத்துவமனையை நாடுகின்றனர். அக்டோபர் 15 ஆம் தேதி நடைபெறும் IND vs PAK போட்டியின் போது, தங்களுடைய வசதிகளில் தங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கான முழு உடல் பரிசோதனைத் தொகுப்பையும் மருத்துவமனை ஒன்று சேர்த்துள்ளது.
பஞ்சாப் அணியிலிந்து ஓடிவிட வேண்டும் என்று நினைத்தேன் – யுவராஜ் சிங் வருத்தம்!
இது குறித்து மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் டாக்டர் நிகில் லாலா கூறியிருப்பதாவது: நாங்களும் எங்கள் மருத்துவமனையில் 24-48 மணிநேரம் தங்கியிருப்பதற்கான விசாரணைகளைப் பெறுகிறோம், குறிப்பாக அக்டோபர் 15 ஆம் தேதி, எங்களிடம் முழு உடல் பரிசோதனை தொகுப்பும் உள்ளது. அக்டோபர் 15ஆம் தேதி நடைபெறவுள்ள உலகக் கோப்பை இந்தியா-பாகிஸ்தான் போட்டி இதற்குக் காரணம். எங்கள் மருத்துவமனைகளைப் போலவே, மற்ற நகர மருத்துவமனைகளிலும் இதே நிலைதான் தெரிகிறது. எனவே, மற்ற சுகாதார பேக்கேஜ்களுடன் வெளிவருவது பற்றி நாங்கள் யோசித்து வருகிறோம், என்று அவர் கூறியுள்ளார்.