பஞ்சாப் அணியிலிருந்து ஓடிவிட வேண்டும் என்று நினைத்தேன் – யுவராஜ் சிங் வருத்தம்!
கடந்த 2009 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிலிருந்து வெளியேற வேண்டும் என்று நினைத்ததாக முன்னாள் வீரர் யுவராஜ் சிங் கூறியுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வந்த தன்னை அணி நிர்வாகம் கழற்றிவிட்டதற்கான காரணத்தை கூட சொல்லவில்லை என்று சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் கூறியிருந்தார். இதையடுத்து, ஐபிஎல் அணிகளால் வீரர்கள் மோசமாக நடத்தப்பட்டதாக டேவிட் வார்னர் மற்றும் பார்த்திவ் படேல் ஆகியோர் தங்களது அனுபவங்களை வெளிப்படையாக பகிர்ந்தனர்.
ரோகித் சர்மா ஃப்ர்ஸ்ட்டுன்னா, விராட் கோலி செகண்ட்; 2ஆவது டெஸ்டில் படைத்த சாதனைகள்!
இதே போன்று இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் கூட, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை பற்றி கருத்து தெரிவித்துள்ளார். கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் முதல் முதலாக தொடங்கப்பட்டது. அப்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு கேப்டனாக யுவராஜ் சிங் செயல்பட்டார். அதோடு பஞ்சாப் அணியை அரை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார். அதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தோல்வி அடைந்து பஞ்சாப் வெளியேறியது.
அதுமட்டுமின்றி அந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது. அடுத்து 2009 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில், பஞ்சாப் அணி 5ஆவது இடத்தோடு வெளியேறியது. அதன் பிறகு தான் பஞ்சாப் நிர்வாகத்தின் உண்மையான முகம் வெளிவந்ததாக யுவராஜ் சிங் கூறியுள்ளார். இது குறித்து யுவராஜ் சிங் கூறியிருப்பதாவது: ஒரு கட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிலிருந்து ஓடிவிட வேண்டும் என்று நினைத்தேன். அதற்கு முக்கிய காரணம் அணி நிர்வாகம். ஏனென்றால், அவர்களுக்கு என்னை பிடிக்கவில்லை. மேலும்,ஒரு கேப்டனாக நான் கேட்ட எதையும் அணி நிர்வாகம் செய்து தரவில்லை. இவ்வளவு ஏன், ஏலத்தில் எடுக்கும் போது கூட நான் கேட்ட வீரர்களை வாங்கவில்லை என்று குற்றம்சாட்டினார்.
அயர்லாந்து டூரில் சுப்மன் கில், ஹர்திக் பாண்டியாவிற்கு ஓய்வு?
ஆனால், அதன் பிறகு நான் பஞ்சாப் அணியிலிருந்து வெளியேறிய பிறகு நான் யாரையெல்லாம் பரிந்துரை செய்தேனோ அவர்களை எல்லாம் ஏலத்தில் எடுத்தார்கள். ஒரு வீரராக, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எனக்கு பிடிக்கும். ஆனால், அணி நிர்வாகத்தை சுத்தமாக எனக்கு பிடிக்காது. கடந்த 2010 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனோடு யுவராஜ் சிங் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.