Asianet News TamilAsianet News Tamil

அயர்லாந்து டூரில் சுப்மன் கில், ஹர்திக் பாண்டியாவிற்கு ஓய்வு?

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரின் போது டி20 போட்டிகளின் கேப்டனான ஹர்திக் பாண்டியாவிற்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Hardik Pandya May Rested from India vs Ireland T20I Series
Author
First Published Jul 21, 2023, 2:18 PM IST

வெஸ்ட் இண்டீஸில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா தற்போது விளையாடி வருகிறது. அதன் பிறகு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ஏற்கனவே ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 13 ஆம் தேதியுடன் வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடிவடைகிறது.

இந்திய அணியில் இடம் பெற்ற முகேஷ் குமார் யார் தெரியுமா? டாக்‌ஸி டிரைவரின் மகன்!

வெஸ்ட் இண்டீஸ் தொடரைத் தொடர்ந்து இந்தியா அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. வரும் ஆகஸ்ட் 18 ஆம் தேதி இந்த தொடர் தொடங்குகிறது. ஆனால், அதற்கு முன்னதாக இந்திய அணி 14 அல்லது 15 ஆம் தேதிகளில் அயர்லாந்துக்கு புறப்பட்டுச் செல்லும்.

ஆசிய கோப்பை அட்டவணையை விமர்சனம் செய்த சல்மான் பட்; பாகிஸ்தானுக்கு ஒரு நியாயம், இலங்கைக்கு ஒரு நியாயமா?

அயர்லாந்துக்கு எதிரான இந்திய அணியில் டி20 போட்டிகளில் கேப்டனாக செயல்படும் ஹர்திக் பாண்டியாவிற்கு ஓய்வு அளிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) வட்டாரங்களின்படி, ஆகஸ்ட் 18 ஆம் தேதி தொடங்க உள்ள அயர்லாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரின் போது, ​​இந்திய டி20 கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வு அளிக்க பரிசீலனைகள் உள்ளன.

500ஆவது போட்டி: அரைசதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனை படைத்த விராட் கோலி!

பிஸியான கிரிக்கெட் காலண்டரைக் கருத்தில் கொண்டு, பணிச்சுமை காரணமாக நிர்வாகத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த அட்டவணையில் செப்டம்பரில் நடைபெறும் ஆசிய கோப்பை 2023 மற்றும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெறும் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 போன்ற முக்கியமான நிகழ்வுகள் உள்ளன.

இந்தியா முதல் நாளில் 288 ரன்கள் குவிப்பு; ரோகித் சர்மா 80, யஷஸ்வி ஜெய்ஸ்வால் 57!

தொடர்ந்து டெஸ்ட், ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் டி20 போட்டிகளில் பிஸியாக விளையாடி வரும் சுப்மன் கில்லிற்கும் ஓய்வு அளிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. எனினும், ஹர்திக் பாண்டியாவின் முடிவைப் பொறுத்து தான் அவருக்கு அயர்லாந்து தொடரில் ஓய்வு அளிக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 100ஆவது டெஸ்ட் போட்டி: நினைவு பரிசு வழங்கிய பிரையன் லாரா!

Follow Us:
Download App:
  • android
  • ios