கோலியைப் பார்த்து ஆனந்த கண்ணீர் விட்ட வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜோசுவா டா சில்வாவின் தாயார்; வைரலாகும் வீடியோ!
விராட் கோலியைப் பார்த்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜோசுவா டா சில்வாவின் தாயார் கண்ணீர் விட்டு அழுத வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தற்போது நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது. இதில், ரோகித் சர்மா 80, யஷஸ்வி ஜெய்ஸ்வால் 57, விராட் கோலி 121, ரவீந்திர ஜடேஜா 61, இஷான் கிஷான் 25 மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் 56 ரன்கள் சேர்க்கவே இந்திய அணி 438 ரன்கள் குவித்தது.
அடுத்தடுத்து பவுண்டரி, ஆல் ஏரியாவுலேயும் ஹீரோவான ரவிச்சந்திரன் அஸ்வின்: இந்தியா 438க்கு ஆல் அவுட்!
இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸை ஆடியது. இதில், டேஜனரைன் சந்தர்பால் 33 ரன்களில் ஜடேஜா பந்தில், அஸ்வினிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் கிரைக் பிராத்வைட் 37 ரன்னும், கிர்க் மெக்கென்ஸி 14 ரன்னும் எடுத்து விளையாடி வருகின்றனர். இறுதியாக வெஸ்ட் இண்டீஸ் அணி 2ஆம் நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
WI vs IND 2nd Test: 500ஆவது போட்டியில் சதம் அடித்து புதிய வரலாறு படைத்த விராட் கோலி!
இரண்டாம் நாள் போட்டி முடிந்த பிறகு விராட் கோலியை சந்தித்த, வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜோசுவா டா சில்வாவின் தாயார் கோலியை கட்டியணைத்து கண்ணீர் விட்டு அழுதுள்ளார். அதன் பிறகு பேசிய அவர், விராட் கோலி எனது மகனைப் போன்றவர். அவரிடமிருந்து ஜோசுவா நிறைய கற்றுக் கொள்வார் என்று கூறியுள்ளார். ஜோசுவாவின் தாயார் மட்டுமின்றி வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் என்று பலரும் அவரை வெகுவாக பாராட்டியுள்ளனர்.
சூர்யகுமார் யாதவ் அல்லது சஞ்சு சாம்சன் - யாருக்கு கேப்டன் வாய்ப்பு?
விராட் கோலி தனது 500ஆவது சர்வதேச போட்டியில் விளையாடுகிறார். இதில், சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். அதாவது, 500ஆவது போட்டியில் சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை இந்த 2ஆவது டெஸ்ட் போட்டியில் அவர் நிகழ்த்தியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் 76 முறை சதம் அடித்துள்ளார். இதற்கு முன்னதாக சச்சின் டெண்டுல்கர் 75 முறை சதம் அடித்திருந்தார். மேலும், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதிக சதம் அடித்தவர்களின் பட்டியலில் 3ஆவது இடம் பிடித்து தென் ஆப்பிரிக்கா வீரர் ஜாக் காலிஸ் சாதனையை சமன் செய்துள்ளார்.
சுனில் கவாஸ்கர் – 13
ஜாக் காலீஸ் – 12
விராட் கோலி – 12
ஏபி டிவிலியர்ஸ் – 11
அதுமட்டுமின்றி 4ஆவது வீரராக களமிறங்கி அதிக முறை சதம் அடித்தவர்களின் பட்டியலில் 4ஆவது இடம் பிடித்துள்ளார்.
பஞ்சாப் அணியிலிந்து ஓடிவிட வேண்டும் என்று நினைத்தேன் – யுவராஜ் சிங் வருத்தம்!
சச்சின் டெண்டுல்கர் – 44
ஜாக் காலிஸ் – 35
மஹேலா ஜெயவர்தனே – 30
விராட் கோலி – 25
பிரையன் லாரா – 24
இந்தப் போட்டியில் சதம் அடித்ததன் மூலமாக 5 ஆண்டுகளுக்குப் பிறகு அந்நிய மண்ணில் முதல் சதம் அடித்துள்ளார்.
- India
- India Tour of West Indies
- India vs West Indies
- Indian Cricket Team
- Joshua Da Silva
- Mukesh Kumar
- Port of Spain
- Ravichandran Ashwin
- Rohit Sharma
- Shardul Thakur
- Team India
- Trinidad
- Virat Kohli
- Virat Kohli 500th Match
- WI vs IND
- WI vs IND 2nd Test
- WI vs IND 2nd Test Live Score
- West Indies
- West Indies vs India
- Yashasvi Jaiswal
- Joshua Da Silva Mother