அடுத்தடுத்து பவுண்டரி, ஆல் ஏரியாவுலேயும் ஹீரோவான ரவிச்சந்திரன் அஸ்வின்: இந்தியா 438க்கு ஆல் அவுட்!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 438 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது.

Virat Kohli and Ravichandran Ashwin Played well, india all out for 438 Runs against west indies 2nd Test match

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டிரினிடாட்டின் போர்ட் ஆஃப் ஸ்பெயினில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது.

WI vs IND 2nd Test: 500ஆவது போட்டியில் சதம் அடித்து புதிய வரலாறு படைத்த விராட் கோலி!

இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் டாஸ் வென்றது. எனினும் பவுலிங் தேர்வு செய்யவே இந்திய அணி பேட்டிங் விளையாடி வருகிறது. ஓபனிங் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 57 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சுப்மன் கில் 10 ரன்களில் வெளியேறினார். இதையடுத்து விராட் கோலி களமிறங்கினார். அவர், நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒரு புறம் அதிரடியாக ஆடிய கேப்டன் ரோகித் சர்மா 80 ரன்களில் ஆட்டமிழந்தார்.

சூர்யகுமார் யாதவ் அல்லது சஞ்சு சாம்சன் - யாருக்கு கேப்டன் வாய்ப்பு?

எனினும், இந்த 2ஆவது டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா தொடக்க வீரராக டெஸ்ட் கிரிக்கெட்டில் 2000 ரன்களை கடந்து ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதே போன்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் 2000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்திருக்கிறார். இதே போன்று சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் தோனியை முந்தியுள்ளார்.

இதன் மூலம் ரோகித் சர்மா இந்தப் பட்டியலில் 5ஆவது இடத்திற்கு முன்னேறி உள்ளார். தோனி 535 போட்டிகளில் விளையாடி 17226 ரன்கள் எடுத்துள்ளார். இதே போன்று, ரோகித் சர்மா 462 போட்டிகளில் விளையாடி 17298 ரன்கள் எடுத்து தோனி சாதனையை முறியடித்துள்ளார்.

அடுத்து வந்த அஜின்க்யா ரஹானே 8 ரன்களில் ஆட்டமிழக்க, ரவீந்திர ஜடேஜா களமிறங்கினார். இறுதியாக முதல் நாளில் மட்டும் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் எடுத்திருந்தது. இதில், விராட் கோலி 87 ரன்னுடனும், ஜடேஜா 36 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இதையடுத்து இருவரும் 2ஆம் ஆட்டத்தை தொடங்கினர். இதில், விராட் கோலி 97 ரன்களாக இருந்த போது பவுண்டரி அடித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 29ஆவது சதத்தை பூர்த்தி செய்தார்.

பஞ்சாப் அணியிலிந்து ஓடிவிட வேண்டும் என்று நினைத்தேன் – யுவராஜ் சிங் வருத்தம்!

அதோடு, 500ஆவது போட்டியில் சதம் அடித்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் 76 முறை சதம் அடித்துள்ளார். இதற்கு முன்னதாக சச்சின் டெண்டுல்கர் 75 முறை சதம் அடித்திருந்தார். மேலும், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதிக சதம் அடித்தவர்களின் பட்டியலில் 3ஆவது இடம் பிடித்து தென் ஆப்பிரிக்கா வீரர் ஜாக் காலிஸ் சாதனையை சமன் செய்துள்ளார்.

சுனில் கவாஸ்கர் – 13

ஜாக் காலீஸ் – 12

விராட் கோலி – 12

ஏபி டிவிலியர்ஸ் – 11

அதுமட்டுமின்றி 4ஆவது வீரராக களமிறங்கி அதிக முறை சதம் அடித்தவர்களின் பட்டியலில் 4ஆவது இடம் பிடித்துள்ளார்.

சச்சின் டெண்டுல்கர் – 44

ஜாக் காலிஸ் – 35

மஹேலா ஜெயவர்தனே – 30

விராட் கோலி – 25

பிரையன் லாரா – 24

இந்தப் போட்டியில் சதம் அடித்ததன் மூலமாக 5 ஆண்டுகளுக்குப் பிறகு அந்நிய மண்ணில் முதல் சதம் அடித்துள்ளார். கூடுதலாக 20 ரன்கள் சேர்த்து 121 ரன்களில் பரிதாபமாக ரன் அவுட் முறையில் வெளியேறியுள்ளார். இவரைத் தொடர்ந்து ரவீந்திர ஜடேஜா 61 ரன்களில் ஆட்டமிழந்தார். இஷான் கிஷான் 25 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அதிரடியாக ஆடி ரன்கள் சேர்த்தார். அவர் 78 பந்துகளில் 56 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஆசிய கோப்பை அட்டவணையை விமர்சனம் செய்த சல்மான் பட்; பாகிஸ்தானுக்கு ஒரு நியாயம், இலங்கைக்கு ஒரு நியாயமா?

ஜெயதேவ் உனத்கட் 7 ரன்களில் ஆட்டமிழக்க, முகமது சிராஜ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இறுதியாக இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நிலையில், 438 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர், வெஸ்ட் இண்டீஸ் தனது முதல் இன்னிங்ஸை ஆடியது. இதில், டேஜனரைன் சந்தர்பால் 33 ரன்களில் ஜடேஜா பந்தில், அஸ்வினிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் கிரைக் பிராத்வைட் 37 ரன்னும், கிர்க் மெக்கென்ஸி 14 ரன்னும் எடுத்து விளையாடி வருகின்றனர். இறுதியாக 2ஆம் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் ஒரு விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்துள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios