WI vs IND 2nd Test: 500ஆவது போட்டியில் சதம் அடித்து புதிய வரலாறு படைத்த விராட் கோலி!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்ததன் மூலமாக விராட் கோலி 500ஆவது போட்டியில் சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டிரினிடாட்டின் போர்ட் ஆஃப் ஸ்பெயினில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது.
சூர்யகுமார் யாதவ் அல்லது சஞ்சு சாம்சன் - யாருக்கு கேப்டன் வாய்ப்பு?
இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் டாஸ் வென்றது. எனினும் பவுலிங் தேர்வு செய்யவே இந்திய அணி பேட்டிங் விளையாடி வருகிறது. ஓபனிங் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 57 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சுப்மன் கில் 10 ரன்களில் வெளியேறினார். இதையடுத்து விராட் கோலி களமிறங்கினார். அவர், நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒரு புறம் அதிரடியாக ஆடிய கேப்டன் ரோகித் சர்மா 80 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பஞ்சாப் அணியிலிந்து ஓடிவிட வேண்டும் என்று நினைத்தேன் – யுவராஜ் சிங் வருத்தம்!
எனினும், இந்த 2ஆவது டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா தொடக்க வீரராக டெஸ்ட் கிரிக்கெட்டில் 2000 ரன்களை கடந்து ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதே போன்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் 2000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்திருக்கிறார். இதே போன்று சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் தோனியை முந்தியுள்ளார்.
இதன் மூலம் ரோகித் சர்மா இந்தப் பட்டியலில் 5ஆவது இடத்திற்கு முன்னேறி உள்ளார். தோனி 535 போட்டிகளில் விளையாடி 17226 ரன்கள் எடுத்துள்ளார். இதே போன்று, ரோகித் சர்மா 462 போட்டிகளில் விளையாடி 17298 ரன்கள் எடுத்து தோனி சாதனையை முறியடித்துள்ளார்.
வந்த அஜின்க்யா ரஹானே 8 ரன்களில் ஆட்டமிழக்க, ரவீந்திர ஜடேஜா களமிறங்கினார். இறுதியாக முதல் நாளில் மட்டும் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் எடுத்திருந்தது. இதில், விராட் கோலி 87 ரன்னுடனும், ஜடேஜா 36 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இதையடுத்து இருவரும் 2ஆம் ஆட்டத்தை தொடங்கினர். இதில், விராட் கோலி 97 ரன்களாக இருந்த போது பவுண்டரி அடித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 29ஆவது சதத்தை பூர்த்தி செய்தார்.
அதோடு, 500ஆவது போட்டியில் சதம் அடித்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் 76 முறை சதம் அடித்துள்ளார். இதற்கு முன்னதாக சச்சின் டெண்டுல்கர் 75 முறை சதம் அடித்திருந்தார். மேலும், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதிக சதம் அடித்தவர்களின் பட்டியலில் 3ஆவது இடம் பிடித்து தென் ஆப்பிரிக்கா வீரர் ஜாக் காலிஸ் சாதனையை சமன் செய்துள்ளார்.
அயர்லாந்து டூரில் சுப்மன் கில், ஹர்திக் பாண்டியாவிற்கு ஓய்வு?
சுனில் கவாஸ்கர் – 13
ஜாக் காலீஸ் – 12
விராட் கோலி – 12
ஏபி டிவிலியர்ஸ் – 11
அதுமட்டுமின்றி 4ஆவது வீரராக களமிறங்கி அதிக முறை சதம் அடித்தவர்களின் பட்டியலில் 4ஆவது இடம் பிடித்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் – 44
ஜாக் காலிஸ் – 35
மஹேலா ஜெயவர்தனே – 30
விராட் கோலி – 25
பிரையன் லாரா - 24
இந்தப் போட்டியில் சதம் அடித்ததன் மூலமாக 5 ஆண்டுகளுக்குப் பிறகு அந்நிய மண்ணில் முதல் சதம் அடித்துள்ளார்.