Asianet News TamilAsianet News Tamil

ஃப்ரெஞ்ச் ஓபன் சூப்பர் 750 பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் - சிராக் ஜோடி சாம்பியன்

ஃப்ரெஞ்ச் ஓபன் சூப்பர் 750 பேட்மிண்டன் ஆடவர் இரட்டையர் பிரிவின் ஃபைனலில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி - சிராக் ஷெட்டி ஜோடி அபாரமாக விளையாடி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.
 

french open super 750 badminton indias satwiksairaj rankireddy and chirag shetty win mens doubles title
Author
First Published Oct 31, 2022, 12:38 PM IST

ஃப்ரெஞ்ச் ஓபன் 750 பேட்மிண்டன் தொடர் பாரிஸ் நகரில் கடந்த 25ம் தேதி முதல் நடந்தது. இந்த தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி - சிராக் ஷெட்டி ஜோடி ஃபைனலுக்கு முன்னேறியது.

அரையிறுதியில் கொரியாவின் கியூ - கிம் ஜோடியை 21-18 மற்றும் 21-14 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி இந்தியாவின் சாத்விக் - சிராக் ஜோடி ஃபைனலுக்கு முன்னேறியது.

T20 World Cup: இந்தியாவை பின்னுக்குத்தள்ளி முதலிடம் பிடித்த தென்னாப்பிரிக்கா! ஆஸி.,-இங்கி., இடையே கடும் போட்டி

ஃபைனலில் லு சிங் யாவோ - யாங் போ ஹான் ஜோடியை எதிர்கொண்டு ஆடிய சாத்விக் - சிராக் ஜோடி அபாரமாக விளையாடி 21-13 மற்றும் 21-19 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

IND vs SA: தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஜெயிக்க வேண்டிய மேட்ச்சை மட்டமான ஃபீல்டிங்கால் தோற்ற இந்தியா

ஃப்ரெஞ்ச் ஓபன் பேட்மிண்டனில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியா முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. சாத்விக் - சிராக் ஜோடி இந்தியாவிற்கு சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்து அசத்தியது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios