Asianet News TamilAsianet News Tamil

T20 World Cup: இந்தியாவை பின்னுக்குத்தள்ளி முதலிடம் பிடித்த தென்னாப்பிரிக்கா! ஆஸி.,-இங்கி., இடையே கடும் போட்டி

டி20 உலக கோப்பையில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி க்ரூப் 2ல் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. க்ரூப் 1ல் நியூசிலாந்து அணி முதலிடம் வகிக்கும் நிலையில், 2வது இடத்தை பிடிக்க இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையே கடும் போட்டி நிலவுகிறது.
 

t20 world cup points table update after india vs south africa clash
Author
First Published Oct 30, 2022, 9:40 PM IST

டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்று விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், உலக கோப்பை தொடர் சுவாரஸ்யமான கட்டத்தை எட்டியுள்ளது.

க்ரூப் 1ல் இடம்பெற்றுள்ள அணிகள் ஆடும் போட்டிகள் பெரும்பாலும் மெல்பர்னில் திட்டமிடப்பட்ட நிலையில் மெல்பர்னில் மழை காரணமாக சில போட்டிகள் பாதிக்கப்பட்டு, புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையே பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட போட்டியும் மழையால் ரத்தாகி இரு அணிகளுக்கும் புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

க்ரூப் 1ஐ பொறுத்தமட்டில் நியூசிலாந்து அணி தான் வலுவான நிலையில் உள்ளது. ஆடிய 3 போட்டிகளில் 2 வெற்றிகள் மற்றும் ஒரு போட்டியில் மழையால் பெற்ற ஒரு புள்ளி என மொத்தம் 5 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 

டி20 உலக கோப்பை: இக்கட்டான சூழலில் அயர்லாந்தை எதிர்கொள்ளும் ஆஸ்திரேலிய அணியின் உத்தேச ஆடும் லெவன்

இங்கிலாந்து, அயர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் தலா 3 புள்ளிகளுடன் முறையே 2, 3 மற்றும் 4ம் இடங்களில் உள்ளன. நியூசிலாந்து அணி க்ரூப் 1லிருந்து அரையிறுதிக்கு முன்னேறிவிடும். 2வது அணியாக அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய 2 அணிகளுக்குமே உள்ளது.

இங்கிலாந்து அணி கடைசி 2 போட்டிகளில் நியூசிலாந்து மற்றும் இலங்கையை எதிர்கொள்கிறது. ஆஸ்திரேலிய அணி கடைசி 2 போட்டிகளில் அயர்லாந்து மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளை எதிர்கொள்கிறது. இந்த 2 போட்டிகளிலும் நல்ல ரன்ரேட்டில் ஜெயித்தால் தான் அரையிறுதி வாய்ப்பு ஆஸ்திரேலியாவிற்கு உள்ளது. எனவே இங்கிலாந்து - ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்கும் இடையே அரையிறுதிக்கு முன்னேற கடும் போட்டி நிலவுகிறது.

க்ரூப் 2ல் இந்திய அணி 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்த நிலையில், இன்றைய போட்டியில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா, 5 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறி அரையிறுதி வாய்ப்பை வலுப்படுத்தியுள்ளது. இதுவரை தலா 3 போட்டிகளில் ஆடியுள்ள தென்னாப்பிரிக்கா 5 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இந்தியா 4 புள்ளிகளுடன் 2ம் இடத்திலும் உள்ளன.

IND vs SA: தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஜெயிக்க வேண்டிய மேட்ச்சை மட்டமான ஃபீல்டிங்கால் தோற்ற இந்தியா

முதல் 2 போட்டிகளில் தோற்று, 3வது போட்டியில் நெதர்லாந்தை வீழ்த்திய பாகிஸ்தான் அணி, கடைசி 2 போட்டிகளிலும் ஜெயித்து, தென்னாப்பிரிக்க அணியை இன்று இந்தியா வீழ்த்தியிருந்தால் பாகிஸ்தானுக்கு பின்புறமாக அரையிறுதி வாய்ப்பு இருந்தது. ஆனால் பாகிஸ்தான் கனவை, இந்தியாவை வீழ்த்தி தகர்த்தது தென்னாப்பிரிக்கா.
 

Follow Us:
Download App:
  • android
  • ios