வருத்தினி ஏகாதசி 2024: தேதி, நேரம் மற்றும் வரலாறு!
சித்திரை மாதம் தேய்பிறையில் வரும் ஏகாதசி தான் 'வருத்தினி ஏகாதசி' என்று அழைக்கப்படுகிறது. இந்த ஏகாதசி பல நன்மைகளை தரும் ஏகாதசி ஆகும்.
ஒவ்வொரு மாதமும் வரும் ஏகாதசி ரொம்பவே விசேஷமானது என்று நம் அனைவரும் அறிந்ததே. ஏகாதசி என்பது விஷ்ணுவை வழிபடுவதற்கு உரிய விரதம் நாள் என்பதால், அந்நாளில் விரதம் இருந்து விஷ்ணுவை வழிப்பட்டால் பெருமாளின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் அந்நாளில், ஏராளமான பக்தர்கள் விரதத்தை கடைப்பிடிப்பார்கள்.
அதுமட்டுமின்றி, ஏகாதசி விரதம் இருப்பவர்கள் ஏகாதசி திதியில் தான் விரதத்தை தொடங்கி, மறுநாள் துவாதசி திதியில் தான் பாரனை செய்து விரதத்தை நிறைவு செய்வார்கள்.
இந்நிலையில், ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை என இரண்டு முறை ஏகாதசி வருவது வழக்கம். அப்படி வரும் ஏகாதசிகள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பெயர், புராண கதை மற்றும் அதற்குரிய விரத பலன்களும் உண்டு. அந்தவகையில், தமிழ் நாட்காட்டிபடி, சித்திரை மாதம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த மாதத்தில் தேய்பிறையில் வரும் ஏகாதசி தான் 'வருத்தினி ஏகாதசி' என்று அழைக்கப்படுகிறது. இந்த ஏகாதசி பல நன்மைகளை தரும் ஏகாதசி ஆகும்.
2024 வருத்தினி ஏகாதசி என்றால் என்ன?
விருத்தினி ஏகதாசி என்ன என்பது அறிவதற்கு முன் அதன் வரலாறு பற்றி முதலில் தெரிந்து கொள்ளுங்கள்... அதாவது இந்து சாஸ்திரங்களின்படி, சிவபெருமானுக்கு பிரம்மாவுக்கும் விருத்தினை ஏகதாசியின் முக்கியத்துவை அடிக்கோட்டிட்டு காட்டும் கதை ஒன்று உள்ளது.
இதையும் படிங்க: Devshayani Ekadashi: தேவசயனி ஏகாதசி எப்போது? அன்று இந்த காரியங்களை செய்தால் மகாலட்சுமிக்கு கோவம் வரும்!!
அது என்னவென்றால், புராணத்தின் படி, சிவபெருமான் கோபத்தில் பிரம்மாவின் ஐந்தாவது தலையை வெட்டினார். இதனால் பிரம்மா சிவபெருமானை சபித்தார். எனவே, இதற்கு பரிகாரம் தேடும் சிவபெருமானுக்கு விஷ்ணு, வருத்தினி ஏகத்தாசி விரதத்தை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தினார். விஷ்ணுவின் ஆலோசனையை பின்பற்றி சிவபெருமான் விரதத்தை கடைபிடித்து, இறுதியில் சாபத்திலிருந்து விடுவிக்கப்பட்டார். இந்த கதை வருத்தினி ஏகதாசியுடன் தொடர்புடைய பக்தி மற்றும் தவம் ஆகியவற்றின் மாற்றும் சக்தியை வலியுறுத்துகிறது.
இதையும் படிங்க: மகாவிஷ்ணுவின் அருளை வாரி தரும் ஏகாதசி விரதம்.. இப்படி செய்தால் அதிக பலன் கிடைக்கும்
'வருத்தினி' என்றால் 'பாதுகாப்பு' என்று அர்த்தம். அதாவது, தங்களின் நிகழ்கால அல்லது கடந்த கால வாழ்வின் சாபங்களால் சுமைய உணரும் நபர்கள், வேண்டுமென்று அல்லது தற்செயலாக தங்கள் செய்த செயலுக்காக வருந்துபவர்கள், இந்த விரதத்தை நேர்மையுடன் கடைபிடிப்பதன் மூலமும், விஷ்ணுவிடம் மன்னிப்பு கேட்பதன் மூலமும் ஆறுதல் பெறலாம் என்று நம்பப்படுகிறது. இந்த விரதத்தை அசைக்க முடியாத பக்தியுடன் கடைப்பிடிக்கும் பக்தர்கள் கடுமையான தவத்தின் பலனைப் போலவே விஷ்ணுமிடமிருந்து ஆசிர்வாதங்களை பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது.
2024 வருத்தினி ஏகாதசி தேதி மற்றும் நேரம்:
ஏகாதசி திதி ஆரம்பம் 3 மே 2024 அன்று இரவு 08.37 மணிக்கு தொடங்கி, 4 மே 2024 அன்று மாலை 06.10 மணிக்கு முடிவடைகிறது. எனவே, இந்த ஆண்டு வருத்தினி ஏகாதசி இன்று (மே.4) சனிக்கிழமை தான் கொண்டாடப்படுகிறது. பாரணை செய்வதற்கான நேரம் 5 மே 2024 அன்று காலை 05.37 முதல் 10.04 மணி வரையில் இருக்கும்.
2024 வருத்தினி ஏகதாசி வழிபாட்டு முறைகள்:
வருத்தினி ஏகதாசி இருப்பவர்கள் அதிகாலையில் எழுந்து ஸ்நானம் செய்து, நல்ல மனம் வீசும் மலர்களாலும், ஆடைகளாலும் அலங்கரித்து, தீபம் ஏற்றி நெற்றியில் திலகம் இட்டு, பெருமாளுக்கு விளக்கேற்றி, பூஜைக்கு பலம் துளசி இலைகள் பஞ்சாமிர்தம் மற்றும் வீட்டில் இனிப்பு போன்ற பிரசாதங்களை ஏற்பாடு செய்யுங்கள். மற்றும் விஷ்ணுவின் நாமம் அல்லது மந்திரங்களை உச்சரித்து விஷ்ணுவின் ஆசிர்வாதங்களை பெறுங்கள். மறுநாள் பாரணை நேரத்தில் விரதம் முடிவடைகிறது. கடுமையான விரதத்தை கடைபிடிக்க முடியாதவர்கள் சாத்வீக உணவுகளான பழங்கள் பால் பொருட்கள் மற்றும் தயிர் சாப்பிடலாம். வழக்கமான ஒப்புக்கு பதிலாக கல் உப்பு பயன்படுத்துங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D