பிரமாண்டமாக தொடங்கும் மகளிருக்கான ஃபிபா உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியீடு!
மகளிருக்கான ஃபிபா உலகக் கோப்பை தொடரானது வரும் 20 ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது.
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் இணைந்து மகளிருக்கான ஃபிபா உலகக் கோப்பை தொடரை நடத்துகின்றன. இரு நாடுகள் இணைந்து உலகக் கோப்பை தொடரை நடத்துவது இதுவே முதல் முறையாகும். இந்த தொடரானது வரும் 20 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 20 ஆம் தேதி வரையில் நடக்கிறது.
பிரிஜ் பூஷன் சரண் சிங், வினோத் தோமருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவு!
இந்த உலகக் கோப்பை தொடரில் 32 அணிகள் பங்கேற்கின்றன. இதில், ஒவ்வொரு குரூப்பிலும் 4 அணிகள் வீதம் மொத்தம் 8 குழுக்கள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் அந்தந்த குழுக்களின் மீதமுள்ள அணிகளுடன் ஒவ்வொரு முறையும் மோத வேண்டும். லீக் சுற்றின் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள், நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும்.
இன்ஸ்டா பதிவின் மூலமாக அப்டேட் கொடுத்த ஜஸ்ப்ரித் பும்ரா; திரும்ப வருவது உறுதி!
நாக் அவுட் சுற்றுகள்:
நாக் அவுட் சுற்றில் சூப்பர் 16 சுற்றுகள், காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் நடைபெறும். மகளிருக்கான ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து கோப்பையின் லீக் போட்டிகள் அனைத்தும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி முடிவடைகிறது. இதையடுத்து, ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் நாக் அவுட் சுற்றுகள் தொடங்கி ஆகஸ்ட் 20 ஆம் தேதி இறுதிப் போட்டியுடன் முடிவடைகிறது.
ஆஸ்திரேலியாவில் 6 போட்டிகளும், நியூசிலாந்தில் 4 போட்டிகள் என மொத்தம் 64 போட்டிகள் ஒரு மாத இடைவெளியில் 10 மைதானங்களில் நடத்தப்பட இருக்கிறது. ஒரு அரையிறுதி போட்டி மட்டும் நியூசிலாந்தில் நடைபெறுகிறது, மற்றொரு அரையிறுதி, 3ஆவது இடத்திற்கான பிளே ஆஃப் மற்றும் இறுதிப் போட்டி ஆகியவை ஆஸ்திரேலியாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2ஆவது டெஸ்டில் ஜெயிக்க, அணியை அறிவித்த வெஸ்ட் இண்டீஸ்; அறிமுகமாகும் ஸ்பின்னர் கெவின் சின்க்ளேர்!
குழு போட்டிகள் – ஜூலை 20 – ஆகஸ்ட் 3
ரவுண்ட் ஆஃப் – ஆகஸ்ட் 5 – ஆகஸ்ட் 8
காலிறுதி – ஆகஸ்ட் 11 மற்றும் ஆகஸ்ட் 12
அரையிறுதி – ஆகஸ்ட் 15 மற்றும் ஆகஸ்ட் 16
மூன்றாவது இடத்திற்கான பிளே ஆஃப் - ஆகஸ்ட் 19
இறுதிப் போட்டி – ஆகஸ்ட் 20
உலகக் கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்ய வெஸ்ட் இண்டீஸ் செல்லும் அஜித் அகர்கர்!
8 குழுக்கள்:
குழு A: சுவிட்சர்லாந்து, நார்வே, நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ்,
குரூப் B: கண்டா, அயர்லாந்து, நைஜீரியா, ஆஸ்திரேலியா
குழு C: ஜப்பான், ஜாம்பியா, ஸ்பெயின், கோஸ்டாரிகா
குழு D: சீனா, டென்மார்க், ஹைட்டி, இங்கிலாந்து
குழு E: போர்ச்சுகல், நெதர்லாந்து, வியட்நாம், அமெரிக்கா
குரூப் F: பிரேசில், பனாமா, ஜமைக்கா, பிரான்ஸ்
குரூப் G: அர்ஜெடினா, இத்தாலி, தென் ஆப்பிரிக்கா, ஸ்வீடன்
குழு H: ஜெர்மனி, மொராக்கோ, கொலம்பியா, தென் கொரியா
வரும் 20 ஆம் தேதி தொடங்கும் முதல் போட்டியில் நியூசிலாந்து மற்றும் நார்வே அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடென் பார்க்கில் தொடங்குகிறது.
தோனிக்குப் பிறகு சிஎஸ்கே கேப்டன் யார்? வாய்ப்பை தட்டிப் பறிக்கும் ருதுராஜ் கெய்க்வாட்!