உலகக் கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்ய வெஸ்ட் இண்டீஸ் செல்லும் அஜித் அகர்கர்!
உலகக் கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்ய தேர்வுக் குழு தலைவரான அஜித் அகர்கர் வெஸ்ட் இண்டீஸ் செல்ல இருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணியின் தேர்வு குழு தலைவரான அஜித் அகர்கர் பொறுப்பேற்றதிலிருந்து இந்திய அணியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அதே போன்று ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டது. இதில், ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
தோனிக்குப் பிறகு சிஎஸ்கே கேப்டன் யார்? வாய்ப்பை தட்டிப் பறிக்கும் ருதுராஜ் கெய்க்வாட்!
இப்படி பல மாற்றங்கள் இந்திய அணியில் நிகழும் நிலையில், உலகக் கோப்பைக்காக 20 பேர் கொண்ட இந்திய அணியை தேர்வு செய்ய இந்திய அணியின் தேர்வுக் குழு தலைவரான அஜித் அகர்கர் வெஸ்ட் இண்டீஸ் செல்ல இருக்கிறார். அங்கு இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் ரோகித் சர்மாவுடன் கலந்துரையாட இருக்கிறார்.
தோனியின் பைக் கலெக்ஷனைப் பார்த்து வாயடைத்துப் போன வெங்கடேஷ் பிரசாத் – வைரலாகும் வீடியோ!
வரும் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கும் ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் நவம்பர் 19 ஆம் தேதி வரையில் நடக்கிறது. இதற்கான இந்திய அணியை தேர்வு செய்யவே அஜித் அகர்கர் வெஸ்ட் இண்டீஸ் செல்ல இருக்கிறார்.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரித் பும்ரா அறுவை சிகிச்சையிலிருந்து மீண்டு வந்து தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அங்கு ஒரு நாளைக்கு 8 முதல் 10 ஓவர்கள் வரையில் பந்து வீசி பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இதே போன்று கேஎல் ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
கிரிக்கெட் வீரராக கனவு காணும் இளைஞர்கள் பொருளாதார பிரச்சனையை சந்திக்க கூடாது: ரிங்கு சிங்!
ஆனால், எப்போது அணிக்கு திரும்புவார்கள் என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை. வெஸ்ட் இண்டீஸ் சென்ற இந்திய அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த டொமினிகா டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் கைப்பற்றிய நிலையில், 2ஆவது டெஸ்ட் போட்டி 20 ஆம் தேதி டிரினிடாட் பகுதியில் தொடங்குகிறது.
8 ஆண்டுகளாக ஆர்சிபியில் இருந்தேன்; ஒரு போன் கால் கூட இல்லை: யுஸ்வேந்திர சாஹல்!