8 ஆண்டுகளாக ஆர்சிபியில் இருந்தேன்; ஒரு போன் கால் கூட இல்லை: யுஸ்வேந்திர சாஹல்!
ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக விளையாடி வந்த யுஸ்வேந்திர சாஹலை அணி நிர்வாகம் நீக்கியதைத் தொடர்ந்து இதுவரையில் ஒரு போன் கால் கூட செய்யவில்லை என்று யுஸ்வேந்திர சாஹல் வருத்தம் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் தொடர்களில் மிக முக்கியமான தொடர் அது என்றால் அது ஐபிஎல் தொடர் தான். கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் பிசிசிஐ மூலமாக இந்த தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலமாக பிசிசிஐக்கு அதிக வருமானமும் கிடைக்கப் பெறுகிறது.
ரூ.100 கோடி மதிப்புள்ள மிக விலை உயர்ந்த பேட் ஸ்பான்சர்ஷிப் கொண்ட இந்திய கிரிக்கெட் வீரர் யார்?
ஐபிஎல் தொடர்களில் அதிக ரசிகர்களை கொண்டுள்ள அணிகளில் விராட் கோலி இடம் பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தான். இதுவரையில் 16 சீசன்கள் நடந்துள்ள நிலையில் ஒரு முறை கூட ஆர்சிபி டைட்டில் கைப்பற்றவில்லை. கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையில் ஆர்சிபி பிளே ஆஃப் சுற்றுக்கு சென்றது.
அயர்லாந்து தொடருக்கு டிராவிட் உள்ளிட்ட பயிற்சியாளருக்கு ஓய்வு; களமிறங்கும் விவிஎஸ் லட்சுமணன்!
ஐபிஎல் தொடரில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டு சாம்பியன் பட்டம் வாங்காத அணி என்றால், அது ஆர்சிபி தான். எனினும் கடைசியாக 2020 ஆண்டிலிருந்து 2022ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 3 முறை ஆர்சிபி அணி பிளே ஆஃப் சுற்றுக்கு சென்றது.
இந்த நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு ஏலத்தில் ஆர்சிபி அவரை ஏலத்தில் எடுக்காதது குறித்து சாஹல் தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: இதுவரையில் ஆர்சிபி அணிக்காக 140 போட்டிகளில் விளையாடியுள்ளேன். பல போட்டிகளில் வெற்றி தேடிக் கொடுத்தேன். ஆனால், 2022 ஆம் ஆண்டு என்னை ஏமாற்றிவிட்டார்கள்.
ஆர்சிபி அணியில் 8 ஆண்டுகள் விளையாடியிருக்கிறேன். ஆனால், 2022 ஆம் ஆண்டு என்னை ஏலத்தில் எடுக்காமல் விட்டுவிட்டார்கள். ஆதலால் நான் கோபம் அடைந்தேன். பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியம் மிகவும் பிடித்தமான ஒன்று.