டெஸ்ட் வரலாற்றில் சிறந்த சுழல் ஜோடி; 495 விக்கெட்டுகள் எடுத்து சாதித்த ரவிச்சந்திரன் அஸ்வின் – ரவீந்திர ஜடேஜா!
டெஸ்ட் வரலாற்றில் மிகச்சிறந்த சுழல் காம்போவாக ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் இணைந்து 495 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்துள்ளனர்.
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி அங்கு 2 டெஸ்ட், 3 ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டொமினிகாவில் உள்ள ரோசோவில் நடந்தது. இந்தப் போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் இஷான் கிஷான் இருவரும் தங்களது டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகினர். இதில், டாஸ் வென்று முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 150 ரன்கள் மட்டுமே எடுத்தது.
வரலாற்று சாதனை படைத்த மார்க்கெட்டா வோண்ட்ரூசோவா: முதல் முறையாக விம்பிள்டன் சாம்பியன்!
இதில், சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் 5 விக்கெட்டுகளும், ரவீந்திர ஜடெஜா 3 விக்கெட்டுகளும், ஷர்துல் தாக்கூர் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளும் கைப்பற்றினர். பின்னர் இந்தியா தனது முதல் இன்னிங்ஸை ஆடியது.
இதில், ரோகித் சர்மா 103 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சுப்மன் கில் 6 ரன்களில் வெளியேறினார். அடுத்து விராட் கோலி களமிறங்கினார். கோலி மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் இணைந்து நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். ஒரு கட்டத்தில் 200 ரன்கள் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜெய்ஸ்வால் 171 ரன்களில் வெளியேறினார்.
அதன் பிறகு வந்த அஜின்க்யா ரஹானே 3 ரன்களில் ஆட்டமிழக்க, விராட் கோலி 76 ரன்களில் அவுட்டானார். இதையடுத்து ரவீந்திர ஜடேஜா மற்றும் இஷான் கிஷான் விளையாடினர். இதில், ஜடேஜா 36 ரன்கள் சேர்க்க, இஷான் கிஷான் ஒரு ரன் எடுத்தார். இறுதியாக இந்தியா 421 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.
ஆசிய விளையாட்டு போட்டியில் இடமில்லை: நம்பி ஏமாந்து போன ஷிகர் தவான் என்ன செய்யப் போகிறார்?
இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி தனது 2ஆவது இன்னிங்ஸை ஆடியது. இதில், ஒவ்வொரு வீரரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கவே வெஸ்ட் இண்டீஸ் 130 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதில்,ரவிச்சந்திரன் அஸ்வின் 7 விக்கெட்டுகளும், ஜடேஜா 2 விக்கெட்டும், சிராஜ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
ஒட்டு மொத்தமாக அஸ்வின் 12 விக்கெட்டும், ஜடேஜா 5 விக்கெட்டும் என்று இந்த டெஸ்டில் மட்டுமே இருவரும் இணைந்து 17 விக்கெட்டுகள் கைப்பற்றினர். இப்படி இருவரும் இணைந்து விளையாடிய 48 டெஸ்ட் போட்டிகளில் 495 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர். இன்னும் 5 விக்கெட்டுகள் எடுத்தால் இந்த சுழல் ஜோடி 500 விக்கெட்டுகள் கைப்பற்றிய வரலாற்று சாதனையை நிகழ்த்துவார்கள்.