ஆசிய விளையாட்டு போட்டியில் இடமில்லை: நம்பி ஏமாந்து போன ஷிகர் தவான் என்ன செய்யப் போகிறார்?
ஆசிய விளையாட்டுப் போட்டியில் தனக்கு இடம் கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்த ஷிகர் தவானுக்கு கடைசியில் ஏமாற்றம் தான் மிஞ்சியது.
ஷிகர் தவான்
கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடி வந்தவர் ஷிகர் தவான். இதுவரையில், 167 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6793 ரன்கள் எடுத்துள்ளார். 34 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2,315 ரன்கள் எடுத்துள்ளார்.
ஷிகர் தவான்
இதே போன்று ஐபிஎல் தொடரில் டெல்லி, மும்பை இந்தியன்ஸ், டெக்கான் சார்ஜஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளில் இடம் பெற்று விளையாடிய ஷிகர் தவான் இந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடினார்.
ஷிகர் தவான்
தற்போது 37 வயதே ஆன, ஷிகர் தவானுக்கு ஐபிஎல் கிரிக்கெட் தொடர்களில் மட்டுமே இடம் கிடைத்து வருகிறது. இந்திய அணியில் டி20 போட்டி, டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் வாய்ப்பு கிடைப்பதற்கு துளி கூட வாய்ப்பில்லை.
ஷிகர் தவான்
தொடர்ந்து இளம் வீரர்களுக்கு அணியில் இடம் கொடுக்கப்பட்டு வருகிற்து. ஷிகர் தவான் கடைசியாக கடந்த 2018 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடினார்.
ஷிகர் தவான்
அதன் பிறகு 5 ஆண்டுகளாக டெஸ்ட் அணியில் இடம் கொடுக்கப்படவில்லை. இதே போன்று கடந்த 2022 ஆம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிராக கடைசியாக ஒரு நாள் போட்டிகளில் விளையாடினார்.
ஷிகர் தவான்
அதே போன்று கடந்த 2021-ஆம் ஆண்டிற்கு பிறகு டி20 அணியிலும் தேர்வு செய்யப்படவில்லை. டி20 போட்டி என்றால், ஐபிஎல் தொடர்களில் மட்டும் விளையாடி வருகிறார்.
ஷிகர் தவான்
டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவ்வப்போது இந்திய அணியில் ஒரு நாள் போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்பட்டு வந்தது.
ஷிகர் தவான்
தற்போது, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. மாறாக, இளம் வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் இஷான் கிஷானுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஷிகர் தவான்
இரண்டாம் தர இந்திய அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாக செயல்பட்டு வந்தார். அப்படி தான் ஆசிய விளையாட்டு போட்டியிலும் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்தார்.
ஷிகர் தவான் கிரிக்கெட் வாழ்க்கை
ஆனால், இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவராக பொறுப்பேற்ற அஜித் அகர்கர் தலைமையிலான கமிட்டி, ஷிகர் தவானை ஓரங்கட்டி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அதிரடியாக ஆடிய ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
ஷிகர் தவான் கிரிக்கெட்
அதோடு, ஆசிய விளையாட்டு போட்டிகள் கொண்ட இரண்டாம் தர இந்திய அணிக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஷிகர் தவானுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
ஆசிய கோப்பை 2023
இதுவரையில் டெஸ்ட், டி20 மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் புறக்கணிக்கப்பட்டு வந்த ஷிகர் தவானுக்கு இரண்டாம் தர வரிசை இந்திய அணியிலும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
ஷிகர் தவான்
இதன் காரணமாக அவரது கிரிக்கெட் வாழ்க்கையை பிசிசிஐ முடிவுக்கு கொண்டு நினைப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது. எனினும், ஷிகர் தவானும் தனது ஓய்வை அறிவிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.