மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் ஜானி பேர்ஸ்டோவை ஸ்டெம்பிங் செய்வேன் - இங்கிலாந்து அணியை எச்சரித்த அலெக்ஸ் கேரி!

தனக்கு மறுபடியும் வாய்ப்பு கிடைத்தால் ஜானி பேர்ஸ்டோவை ஸ்டெம்பிங் செய்வேன் என்று ஆஸ்திரேலியா விக்கெட் கீப்பர் அல்கெஸ் கேரி இங்கிலாந்து அணியை எச்சரித்துள்ளார்.

If I am getting another chance, I would repeat Jonny Bairstow stumping in Ashes 2023 said Australia wicket Keeper Alex Carey

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முக்கியமான தொடரான ஆஷஸ் டெஸ்ட் தொடர் தற்போது நடந்து வருகிறது. இதில், 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடத்தப்பட்டு வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றது. 2ஆவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அதிக விக்கெட் கைப்பற்றிய பவுலர்களின் பட்டியல்!

இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி தான் வெற்றி பெற வேண்டியது. இங்கிலாந்து அணியின் அதிரடி வீரரும், விக்கெட் கீப்பருமான ஜானி பேர்ஸ்டோவ் பேட்டிங் ஆடிக் கொண்டிருந்தார். அப்போது அவர் கிரீஸ் கோட்டை விட்டு வெளியில் வரும் நேரம் பார்த்து, விக்கெட் கீப்பிங் செய்து கொண்டிருந்த ஆஸ்திரேலிய வீரர் அல்கெஸ் கேரி, சரியாக த்ரோ வீசி பேர்ஸ்டோவை ஆட்டமிழக்கச் செய்தார்.

ஆசிய விளையாட்டு போட்டியில் இடமில்லை: நம்பி ஏமாந்து போன ஷிகர் தவான் என்ன செய்யப் போகிறார்?

இதனை சற்றும் எதிர்பார்க்காத பேர்ஸ்டோவ் பரிதாபமாக வெளியேறினார். இதில் அவர் 10 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இதையடுத்து இச்சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கிரிக்கெட் பிரபலங்கள் முதல் இங்கிலாந்து பிரதமர் வரை இச்சம்பம் விவாதத்தை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி இது ஸ்பிரிட் ஆஃப் தி கேம் கிடையாது என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தது.

திட்டமிடப்பட்டி அக்.15ல் இந்தியா – பாகிஸ்தான் போட்டிகள் நடக்க வேண்டும்: ஷாஹீத் அப்ரிடி

இந்தப் போட்டியில் தோல்வி அடைந்ததற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இங்கிலாந்து 3ஆவது டெஸ்ட் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி வரும் 19 ஆம் தேதி நடக்க உள்ளது. இந்த நிலையில், ஆஸ்திரேலியா விக்கெட் கீப்பரான அலெக்ஸ் கேரி, இங்கிலாந்து அணியை எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் ஜானி பேர்ஸ்டோவ்வை ஸ்டெம்பிங் செய்வேன் என்று அவர் பேசியுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios