Cricket
உலகக் கோப்பை தொடர்களில் ஒரே சீசனில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர்கள் யார் யார் என்று பார்க்கலாம். அதில், இந்திய வீரர்கள் இருக்கிறார்களா?
2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 27 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
2007 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் கிளென் மெக்ராத் 26 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
கடந்த 2003 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை வீரர் 23 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
2007 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் 23 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
கடந்த 2007 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை தொடரில் ஆஸி, வீரர் ஷான் டைட் அதிகபட்சமாக 23 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 22 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட் அதிகபட்சமாக 22 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
கடந்த 2003 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ 22விக்கெட்டுகள் கைப்பற்றினார். இந்த தொடரில் ஆஸ்திரேலியா சாம்பியனானது.
கடந்த 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ஷாகீத் அப்ரிடி 21 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இந்த தொடரில் தா இந்தியா 2ஆவது முறையாக உலகக் கோப்பை சாம்பியனானது.
2003 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் கிளென் மெக்ராத் 21 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.