Cricket

ரவிச்சந்திரன் அஸ்வின் குடும்பம்

இந்த நிலையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் பிரீத்தி இருவரும் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியை சானியா மிர்சா, வேதா கிருஷ்ணமூர்த்தி தொகுத்து வழங்கினர்.

ரவிச்சந்திரன் அஸ்வின்

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர் ரவிச்சந்திரன் அஸ்வின். தற்போது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார்.
 

அஸ்வின் குடும்பம்

இதுவரையில் 9 போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5ல் வெற்றியும், 4ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளது.

அஸ்வின் மனைவி பிரீத்தி

ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் பிரீத்தி இருவரும் கடந்த 2011 ஆம் ஆண்டு காதல் திருமணாம் செய்து கொண்டனர். அவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர்.

பிரீத்தி அஸ்வின்

அப்போது பிரீத்தியிடம் காதல் அனுபவம் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. நானும், அஸ்வினும் ஒரே பள்ளியில் தான் படித்தோம். அப்போதிலிருந்து ஒருவருக்கொருவர் நன்று தெரியும்.

அஸ்வின் குடும்பம்

இதையடுத்து வளர்ந்து பெரியவர்களான பிறகு மீண்டும் சந்தித்தோம். அஸ்வினுக்கு என் மீது காதல் இருந்தது. அது நாங்கள் படித்த பள்ளி முழுவதும் தெரியும்.

ரவிச்சந்திரன் அஸ்வின்

அஸ்வின் கிரிக்கெட்டிற்காக வேறொரு பள்ளிக்கு சென்றார். அப்போதும் கூட நாங்கள் பிறந்தநாள் நிகழ்ச்சிகளின் மூலமாக ஒருவருக்கொருவர் தொடர்பில் தான் இருந்தோம். சந்தித்துக் கொள்வோம்.
 

பிரீத்தி ரவிச்சந்திரன் அஸ்வின்

நான் சிஎஸ்கே கணக்கை கையாளும் போது மீண்டும் அவரை சந்தித்தேன். அவர் அப்போது 6 அடி உயரத்தில் இருந்தார். ஒரு நாள் அவர் என்னை கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு அழைத்துச் சென்றார்.
 

அஸ்வின்

அப்போது, என் வாழ்நாள் முழுவதும் நான் உன்னை மிகவும் விரும்பினேன். அது கடந்த 10 ஆண்டுகளாக மாறவில்லை என்று கூறினார். 
 

ரவிச்சந்திரன் அஸ்வின்

இதற்கிடையில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் பிரீத்தி இருவருக்கும் செஸ் விளையாட்டு போட்டி வைக்கப்பட்டது. ஒவ்வொரு முறை காயின் நகர்த்தும் போது அவர்களிடம் கேள்வி எழுப்பப்பட்டது. 

அஸ்வின் அவரது மனைவி

தந்தையாகவும், கணவராகவும் அஸ்வின் எப்படி என்றும், யார் அடிக்கடி சண்டை போடுவது என்றும் கேட்கப்பட்டது.

அஸ்வின் குடும்பம்

அஸ்வின் இன்று காலை கூட நாங்கள் சண்டையிட்டோம்.  எதைப் பற்றி என்று நினைவில் இல்லை என்றார். 

WTC Finalல் நான் இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன் - கேஎல் ராகுல்!