Cricket

கேஎல் ராகுல்

லக்னோ, பெங்களூரு அணிகளுக்கு இடையிலான 43 ஆவது போட்டி லக்னோ மைதானத்தில் கடந்த 1ஆம் தேதி நடந்தது. இதில் முதலில் ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 129 ரன்கள் எடுத்தது. 

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்

போட்டியின் 2ஆவது ஓவரின் போது பவுண்டரியை தடுக்க ஓடிய கேஎல் ராகுலுக்கு வலது காலி தொடை பகுதியில் காயம் ஏற்பட்டது. அவருக்குப் பதிலாக குர்ணல் பாண்டியாக கேப்டனாக செயல்பட்டார்.
 

கேஎல் ராகுல் காயம்

பேட்டிங்கின் போது கூட கடைசியில் இறங்கினார். இறுதியாக 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்கள் மட்டுமே எடுத்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 
 

லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல்

இதைத் தொடர்ந்து கடந்த 3 ஆம் தேதி லக்னோ மைதானத்தில் சென்னைக்கு எதிராக நடந்த போட்டியில் கேஎல் ராகுல் இடம் பெறவில்லை. அவருக்குப் பதிலாக குர்ணல் பாண்டியா தான் கேப்டனாக செயல்பட்டார்.

ஐபிஎல் 2023 - லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்

சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது. 
 

கேஎல் ராகுல் அறுவை சிகிச்சை

கேஎல் ராகுல் காயம் காரணமாக எஞ்சிய போட்டிகளிலிருந்து வெளியேறிய நிலையில், வரும் ஜூன் 7ஆம் தேதி நடக்கவுள்ள WTC இறுதிப் போட்டியிலும் பங்கேற்கவில்லை என்பதை அவரே உறுதி செய்துள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி

மருத்துவக் குழுவுடன் கவனமாக பரிசீலித்து, ஆலோசனை செய்த பிறகு, விரைவில் என் தொடையில் அறுவை சிகிச்சை செய்யப் போகிறேன் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஐபிஎல் சீசனிலிருந்து கேஎல் ராகுல் விலகல்

முக்கியமான இந்த நேரத்தில் என்னால் இருக்க முடியாமல் போனது எனக்கு வேதனை அளிக்கிறது. இளம் வீரர்கள் உத்வேகத்துடன் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று நம்புகிறேன்.
 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலிருந்து விலகல்

இந்திய அணியுடன் அடுத்த மாதம் ஓவல் மைதானத்தில் இருக்கமாட்டேன் என்பதில் உறுதியாக இருக்கிறேன். என் நாட்டிற்கு திரும்பவும் உதவவும் என்னல் முடிந்த அனைத்தையும் செய்வேன்.
 

இந்திய அணிக்கு சிக்கல்

விரைவில் களத்திற்கு திரும்புவேன் என்று நம்புகிறேன். கடந்த சில நாட்களாக மிகவும் கடினமாக இருந்தது, ஆனால் நான் மேலே வர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.