உணவு மற்றும் பிட்னஸ் ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர் விராட் கோலி. இதன் காரணமாக கொல்கத்தாவில் ஒன்8 கம்யூன் என்ற பெயரில் உணவகம் ஒன்றை விராட் கோலி நடத்தி வருகிறார்.
Image credits: Instagram
சுரேஷ் ரெய்னா:
சுரேஷ் ரெய்னா, ரெய்னா இந்திய உணகவம் என்ற பெயரில் நெதர்லாந்தில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் உணவகம் ஒன்றை அமைத்துள்ளார். விரைவில் இந்த உணவகத்தின் திறப்பு விழா பிரம்மாண்டமாக தொடங்க உள்ளது.
Image credits: Instagram
கபில்தேவ் 11
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ், தனது பெயரிலேயே பீகாரில் உணவகம் ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறார். ஆம், கபில்தேவ் 11 என்ற பெயரில் உணவகம் நடத்தி வருகிறார்.
Image credits: Instagram
கவுதம் காம்பீர்:
இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் கவுதம் காம்பீர் டெல்லியில் கரம் தரம் தாபா தே தேக்கா என்ற பெயரில் தாபா ஹோட்டல் நடத்தி வருகிறார்.
Image credits: Instagram
குமார் சங்ககாரா – மகிலா ஜெயவர்த்தனே
குமார் சங்ககாரா மற்றும் மகிலா ஜெயவர்த்தனே ஒன்றாக இணைந்து உணவகம் ஒன்றை நடத்தி வருகிறனர். Ministry of Crab என்ற பெயரில் உணவகத்தை நடத்தி வருகின்றனர்.
Image credits: Instagram
கிறிஸ் கெயில்:
வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் கிறிஸ் கெயில் டிரிபிள் செஞ்சூரி ஸ்போர்ட்ஸ் 333 என்ற பெயரில் வெஸ்ட் இண்டீஸில் உணவகம் நடத்தி வருகிறார்.