தோனியின் பைக் கலெக்ஷனைப் பார்த்து வாயடைத்துப் போன வெங்கடேஷ் பிரசாத் – வைரலாகும் வீடியோ!
ராஞ்சியிலுள்ள தோனி வீட்டிற்கு சென்ற வெங்கடேஷ் பிரசாத், பைக்குகளை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர் எம்.எஸ்.தோனி. டி20 உலகக் கோப்பை, ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி என்று கைப்பற்றிக் கொடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். 2011 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பைக்குப் பிறகு இதுவரையில் இந்திய அணி உலகக் கோப்பையை கைப்பற்றவில்லை. இதே போன்று ஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 5ஆவது முறையாக சாம்பியன்ஸ் டிராபி வாங்கி கொடுத்துள்ளார்.
கிரிக்கெட் வீரராக கனவு காணும் இளைஞர்கள் பொருளாதார பிரச்சனையை சந்திக்க கூடாது: ரிங்கு சிங்!
கிரிக்கெட் மீதான தோனியின் ஆர்வம் எவ்வளவுக்கு எவ்வளவு இருக்கிறதோ, அதே அளவிற்கு பை, கார்கள் மீது அதிக ஆர்வமும் கொண்டுள்ளார். ஏராளமான பைக்குகள் தனது வீட்டில் வாங்கி குவித்துள்ளார். இந்த நிலையில், தான் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத், ராஞ்சியிலுள்ள தோனியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு, தோனி வைத்திருக்கும் பைக்குகளை ஒட்டுமொத்தாம வீடியோ எடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் கிட்டத்தட்ட 50க்கும் அதிகமான பைக்குகள், 10க்கும் மேற்பட்ட கார்களும் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
8 ஆண்டுகளாக ஆர்சிபியில் இருந்தேன்; ஒரு போன் கால் கூட இல்லை: யுஸ்வேந்திர சாஹல்!
இதைப் பார்த்த வெங்கடேஷ் பிரசாத் மட்டுமின்றி அவரது நண்பர்களும் வியந்து பார்த்துள்ளனர். அந்த வீடியோவில், பைக்குகளை நிறுத்துவதற்கான ஷெட் அமைப்பதற்கு வீட்டில் குடும்பத்தினர் யாரும் ஒப்புக் கொள்ளவில்லை. ஆதலால், தான் வீட்டிலிருந்து சிறிது தொலைவில் பைக் மற்றும் கார்களை நிறுத்துவதற்கு ஷெட் அமைத்தோம். இந்த ஷெட் அருகில் தான் பேட்மிண்டன் கோர்ட்டும் அமைந்துள்ளது என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரூ.100 கோடி மதிப்புள்ள மிக விலை உயர்ந்த பேட் ஸ்பான்சர்ஷிப் கொண்ட இந்திய கிரிக்கெட் வீரர் யார்?