Asianet News TamilAsianet News Tamil

பிரிஜ் பூஷன் சரண் சிங், வினோத் தோமருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவு!

மல்யுத்த வீரர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) முன்னாள் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

BJP MP Brij Bhushan Sharan Singh and Vinod Tomar granted interim bail
Author
First Published Jul 18, 2023, 3:55 PM IST

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக மல்யுத்த வீரர்கள் சுமத்தியுள்ள பாலியல் துன்புறுத்தல் புகார்கள் தொடர்பான தகவல்களைக் கோரி ஐந்து நாடுகளின் மல்யுத்த கூட்டமைப்புகளுக்கு டெல்லி காவல்துறை கடிதம் எழுதியுள்ளது. இந்தோனேஷியா, பல்கேரியா, கிர்கிஸ்தான், மங்கோலியா மற்றும் கஜகஸ்தான் ஆகிய நாடுகளில் நடந்த போட்டிகளின் போது பிரிஜ் பூஷன் தங்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மல்யுத்த வீரர்கள் கூறியுள்ளதால் அந்த நாடுகளின் மல்யுத்த கூட்டமைப்புகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இன்ஸ்டா பதிவின் மூலமாக அப்டேட் கொடுத்த ஜஸ்ப்ரித் பும்ரா; திரும்ப வருவது உறுதி!

இந்த வெளிநாட்டு மல்யுத்த அமைப்புகளிடம், போட்டியின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், போட்டி நடைபெறும் இடங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் தங்குமிடங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் போன்றவற்றை டெல்லி போலீசார் கோரியுள்ளனர்.

2ஆவது டெஸ்டில் ஜெயிக்க, அணியை அறிவித்த வெஸ்ட் இண்டீஸ்; அறிமுகமாகும் ஸ்பின்னர் கெவின் சின்க்ளேர்!

காவல்துறை ஆணையர் சஞ்சய் அரோரா திங்கள்கிழமை சிறப்பு ஆணையர் சாகர்ப்ரீத் ஹூடா, டிசிபிகள் பிரணவ் தயல் மற்றும் மனிஷி சந்திரா ஆகியோருடன் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். அப்போது சில சாட்சிகள் வீராங்கனைகளின் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் வகையில் வாக்கு மூலங்கள் அளித்துள்ளனர். வீராங்கனைகளுக்கு நெருக்கமான இன்னும் சிலர் குற்றம் நடந்ததைத் தாங்கள் பார்க்காதபோதும் குற்றச்சாட்டுகளை ஆதரித்தனர். ஆனால், நேரடி சாட்சிகளாக இருந்தவர்களே அதிக அளவில் வந்து வாக்குமூலம் அளித்துள்ளனர்.

உலகக் கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்ய வெஸ்ட் இண்டீஸ் செல்லும் அஜித் அகர்கர்!

ஒரு வீராங்கனை பல்கேரியாவில் வைத்து பிரிஜ் பூஷன் தனது டி-ஷர்ட்டை இழுத்து, அவரது கையை தனது வயிற்றில் வைத்து சுவாசத்தைச் சரிபார்ப்பது போல் நடித்தார் என்று குற்றம்சாட்டியுளாளர். மற்றொரு மல்யுத்த வீராங்கனை கஜகஸ்தானில் தனது அனுமதியின்றி வலுக்கட்டாயமாக கட்டிப்பிடிக்கப்பட்டதாகப் புகார் கூறியுள்ளார்.

இன்னொரு வீராங்கனை கிர்கிஸ்தானில் நடந்த நிகழ்வைக் குறிப்பிட்டார். தன்னை ஒரு பாயில் படுக்க வைத்து சுவாசத்தைப் பரிசோதிப்பது போல வயிற்றில் கை வைத்து பாவனை செய்தார் என்கிறார். மங்கோலியாவில் நடந்த போட்டிக்காகச் சென்றிருந்தபோது தன்னை பின்புறத்தில் தகாத முறையில் தொட்டதாக வேறொரு வீராங்கனையின் புகார் வந்துள்ளது.

இதையடுத்து பிரிஜ் பூஷன் சரண் சிங் மற்றும் வினோத் தோமர் இருவரும் விசாரணையில் சேர்ந்து 41A CrPC பிரிவின் படி உத்தரவுகளுக்கு இணங்கியதால், கைது செய்யப்படாமல் விசாரணைக்காக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை கூறியுள்ளது.

தோனிக்குப் பிறகு சிஎஸ்கே கேப்டன் யார்? வாய்ப்பை தட்டிப் பறிக்கும் ருதுராஜ் கெய்க்வாட்!

ஆறு முன்னணி மல்யுத்த வீரர்களின் புகார்களின் "இதுவரையிலான விசாரணையின்" அடிப்படையில், சிங் பாலியல் துன்புறுத்தல், பாலியல் துன்புறுத்தல் மற்றும் பின்தொடர்தல் போன்ற குற்றங்களுக்காக "விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்" என்று டெல்லி காவல்துறை குற்றப்பத்திரிகை கூறியது.

இந்த நிலையில் தான் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும் அவரது செயலாளர் வினோத் தோமருக்கும் டெல்லி நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, வரும் 20 ஆம் தேதி அடுத்தகட்ட விசாரணை மேற்கொள்ளப்பட இருப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அடுத்த விசாரணை தேதி வரை இருவருக்கும் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

தோனியின் பைக் கலெக்‌ஷனைப் பார்த்து வாயடைத்துப் போன வெங்கடேஷ் பிரசாத் – வைரலாகும் வீடியோ!

Follow Us:
Download App:
  • android
  • ios