Asianet News TamilAsianet News Tamil

2ஆவது டெஸ்டில் ஜெயிக்க, அணியை அறிவித்த வெஸ்ட் இண்டீஸ்; அறிமுகமாகும் ஸ்பின்னர் கெவின் சின்க்ளேர்!

இந்தியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

West Indies Announced Squad For 2nd Test against India at Queen's Park Oval, Port of Spain, Trinidad
Author
First Published Jul 18, 2023, 1:42 PM IST

வெஸ்ட் இண்டீஸ் சென்ற இந்திய அணி 2 டெஸ்ட், 3 ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதலில் இரு அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடக்கிறது. கடந்த 12 ஆம் தேதி ரோசோவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னர் ஆடிய இந்திய அணி 5 விக்கெட் இழந்து 421 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதில், இந்தியா கேப்டன் 103 ரன்கள் எடுத்து 10ஆவது டெஸ்ட் போட்டி சதத்தை பூர்த்தி செய்தார்.

உலகக் கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்ய வெஸ்ட் இண்டீஸ் செல்லும் அஜித் அகர்கர்!

இதே போன்று டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 387 பந்துகளில் 16 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உள்பட 171 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த விராட் கோலி 76 ரன்களில் வெளியேறினார். ஒருகட்டத்தில் இந்திய அணி 421 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது.

தோனிக்குப் பிறகு சிஎஸ்கே கேப்டன் யார்? வாய்ப்பை தட்டிப் பறிக்கும் ருதுராஜ் கெய்க்வாட்!

இதையடுத்து 2ஆவது இன்னிங்ஸை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 130 ரன்களுக்கு ஆல் அவுட்டாக இந்தியா 141 மற்றும் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 20 ஆம் தேதி டிரினிடாட் பகுதியில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல், போர்ட் ஆஃப் ஸ்பெயின் மைதானத்தில் நடக்கிறது.

இந்த நிலையில், முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில், வெஸ்ட் இண்டீஸ் 2ஆவது டெஸ்ட் போட்டிக்கான அணியை அறிவித்துள்ளது. அதன்படி இந்த டெஸ்ட் போட்டியின் மூலமாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளரான கெவின் சின்க்ளேர் அறிமுகமாகிறார்.

தோனியின் பைக் கலெக்‌ஷனைப் பார்த்து வாயடைத்துப் போன வெங்கடேஷ் பிரசாத் – வைரலாகும் வீடியோ!

கயானாவில் பிறந்து வளர்ந்த கெவின் சின்க்ளேர், ரஹ்கீம் கார்ன்வாலுக்குப் பதிலாக இந்தப் போட்டியில் களமிறக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. கார்ன்வால் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 19 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். பந்து வீச்சில் விராட் கோலியை ஆட்டமிழக்கச் செய்தார். 2ஆவது இன்னிங்ஸில் 4 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட் வீரராக கனவு காணும் இளைஞர்கள் பொருளாதார பிரச்சனையை சந்திக்க கூடாது: ரிங்கு சிங்!

2ஆவது டெஸ்டுக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி:

கிரேக் பிராத்வைட் (கேப்டன்), ஜெர்மைன் பிளாக்வுட் (துணை கேப்டன்), அலிக் அதானாஸ், டேகனரைன் சந்தர்பால், ரஹ்கீம் கார்ன்வால், ஜோசுவா டா சில்வா (விக்கெட் கீப்பர்), ஜேசன் ஹோல்டர், அல்ஸாரி ஜோசப், ஜோமெல் வாரிக்கன், கெமர் ரோச், கிர்க் மெக்கென்சி, கெவின் சின்க்ளேர், ஷானன் கேப்ரியல்.

Follow Us:
Download App:
  • android
  • ios