Asianet News TamilAsianet News Tamil

இன்ஸ்டா பதிவின் மூலமாக அப்டேட் கொடுத்த ஜஸ்ப்ரித் பும்ரா; திரும்ப வருவது உறுதி!

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா இன்ஸ்டாகிராம் பதிவின் மூலமாக எப்போது திரும்ப வருவேன் என்பது குறித்து அறிவிப்பு வெளியிட்ட்ள்ளார்.

Indian fast bowler Jasprit Bumrah announced his come back with instagram post
Author
First Published Jul 18, 2023, 2:20 PM IST | Last Updated Jul 18, 2023, 2:20 PM IST

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளார் ஜஸ்ப்ரித் பும்ரா காயம் காரணமாக, ஆசிய கோப்பை, டி20 உலகக் கோப்பை, இலங்கைக்கு எதிரான தொடர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் மற்றும் ஐபிஎல் தொடர் என்று எந்த தொடரிலும் இடம் பெறவில்லை. முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக நியூசிலாந்தில் அறுவை சிகிச்சை செய்தார். இதையடுத்து நீண்ட நாள் ஓய்விற்குப் பிறகு பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியை மேற்கொண்டார்.

2ஆவது டெஸ்டில் ஜெயிக்க, அணியை அறிவித்த வெஸ்ட் இண்டீஸ்; அறிமுகமாகும் ஸ்பின்னர் கெவின் சின்க்ளேர்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த இந்தியா அடுத்து ஆசிய கோப்பை மற்றும் முக்கியமான தொடரான ஒரு நாள் கிரிக்கெட் உலக் கோப்பை தொடரில் விளையாட இருக்கிறது. இதற்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

உலகக் கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்ய வெஸ்ட் இண்டீஸ் செல்லும் அஜித் அகர்கர்!

வெஸ்ட் இண்டீஸ் தொடரைத் தொடர்ந்து இந்தியா அயர்லாந்துக்கு செல்கிறது. அங்கு 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதற்கான அட்டவணை வெளியானது. ஆனால், அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படவில்லை. இந்த அயர்லாந்து தொடர் மூலமாக ஜஸ்ப்ரித் பும்ரா அணிக்கு திரும்புவார் என்று சொல்லப்பட்டது. ஆனால், அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளிவரவில்லை.

தோனிக்குப் பிறகு சிஎஸ்கே கேப்டன் யார்? வாய்ப்பை தட்டிப் பறிக்கும் ருதுராஜ் கெய்க்வாட்!

இந்த நிலையில், தான் ஜஸ்ப்ரித் பும்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதில் தான் எப்போது அணிக்கு திரும்புவேன் என்று பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:  கம்மிங் ஹோம்… (சாதனை. ஸ்கைலர் கிரே) என்று பதிவிட்டுள்ளார். இதன் மூலமாக தனது தாய் வீடான இந்திய அணிக்கு திரும்ப உள்ளார். அது அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடர் மூலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட்டில் பங்கேற்பார் என்று தெரிகிறது.

தோனியின் பைக் கலெக்‌ஷனைப் பார்த்து வாயடைத்துப் போன வெங்கடேஷ் பிரசாத் – வைரலாகும் வீடியோ!

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by jasprit bumrah (@jaspritb1)

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios