சூப்பர் ஃபார்மில் இருக்கும் இங்கிலாந்து - இந்தியா மோதும் முதல் டி-20 ஆட்டம் இன்று தொடங்குகிறது.

அயர்லாந்து, இங்கிலாந்து நாடுகளில் டி-20, ஒரு நாள் போட்டி, டெஸ்ட் தொடர்களில் கலந்துகொள்வதற்காக இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 

அயர்லாந்து அணியை 2-0 என டி-20 தொடரில் வீழ்த்தியது இந்தியா. தற்போது இங்கிலாந்துடன் மூன்று டி-20 ஆட்டங்கள், மூன்று ஒரு நாள் சர்வதேச ஆட்டங்கள், ஐந்து டெஸ்ட் ஆட்டங்கள் நடக்கின்றன. 

டி-20 ஆட்டங்கள் 3, 6, 8-ஆம் தேதிகளிலும், மூன்று 50 ஒரு நாள் போட்டிகள் 12, 14, 17-ஆம் தேதிகளிலும், முதல் டெஸ்டு போட்டி ஆகஸ்டு 1 முதல் 5-ம் வரையும், இரண்டாம் டெஸ்டு 9 முதல் 13-ஆம் தேதி வரையும், மூன்றாம் டெஸ்டு 18 முதல் 22-ஆம் தேதி வரையும், நான்காவது டெஸ்டு ஆகஸ்டு 30 முதல் செப்டம்பர் 3-ஆம் தேதி வரையும், ஐந்தாவது டெஸ்டு செப்டம்பர் 7 முதல் 11-ஆம் தேதி வரையும் நடைபெறுகிறது.

டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது. அதேநேரத்தில் இங்கிலாந்து அணி ஒரு நாள் போட்டி தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது. 

இங்கிலாந்து அணியில் குக், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜேசன் ராய், அலெக்ஸ் ஹேல்ஸ், ஜான் பேர்ஸ்டோவ், ஜோஸ் பட்லர், ஜோ ரூட் ஆகியோர் சிறந்த பார்மில் உள்ளனர்.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும் சிறந்த பார்மில் உள்ளது. கோலி, தோனி, ராகுல், ரெய்னா, பாண்டியா, தவன் உள்ளிட்டோர் பேட்டிங்கில் சிறப்பாக ஆடி வருகின்றனர். பந்துவீச்சில் இந்திய அணி வலுவான சுழற்பந்து வீச்சாளர்களைக் கொண்டுள்ளது. வேகப்பந்து வீச்சில் க்ருணால் பாண்டியா, சஹார் இடம் பெற்றுள்ளனர். 

சூப்பர் ஃபார்மில் இருக்கும் இவ்விரு அணிகள் மோதும் முதல் டி-20 ஆட்டம் இன்று தொடங்குகிறது.