பாடகி சின்மயி உள்பட கவிஞர் வைரமுத்து மீது இதுவரையில் 19 பாலியல் குற்றச்சாட்டுகள் இருந்தும் கூட அவர் மீது இதுவரையில் ஒரு எஃப் ஐ ஆர் கூட பதிவு செய்யவில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் தெரிவித்தனர். இதன் காரணமாக அவர் பதவி விலக வேண்டும், அவரை கைது செய்ய கோரியும் பஜ்ரங் புனியா உள்ளிட்ட மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தினர். இதையடுத்து பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது போக்சோ உள்ளிட்ட 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. 18 வயதிற்குட்பட்ட வீராங்கனையின் குற்றச்சாட்டு என்பதால், பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மழைக்கு வாய்ப்பில்லை: இன்று 40 ஓவர்கள் போட்டி தானாம்: சென்னை - குஜராத் ரசிகர்கள் ஹேப்பி அண்ணாச்சி!
இதுவரையில் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், மீண்டும் டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர்கள் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழா டெல்லியில் நடந்தது. அப்போது தங்களுக்கு நீதி கேட்டு மல்யுத்த வீரர், வீராங்கனைகள் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நோக்கி பேரணியாக சென்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், அவர்களை வலுக்கட்டாயமாக தடுத்து நிறுத்தி தரதரவென இழுத்துச் சென்று போலீஸ் வாகனத்தில் கைது செய்து அழைத்துச் சென்றனர். இச்சம்வம் நாடு முழவதும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
CSK vs GT IPL Finals 2023: ரயில் நிலையத்திலேயே படுத்து உறங்கிய சிஎஸ்கே ரசிகர்கள்!
மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் கைது சம்பவம் குறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இது குறித்து பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கவிஞர் வைரமுத்து மீது இதுவரையில் 19 பாலியல் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால், ஒரு எஃப் ஐ ஆர் கூட அவர் மீது சுமத்தப்படவில்லை. பாடகி சின்மயி உள்ளிட்டோர் அவர் மீது பாலியல் குற்றம்சாட்டியிருக்கின்றனர்.
வரலாற்றில் மறக்க முடியாத டே: முதல் முறையாக குஜராத் டைட்டன்ஸ் சாம்பியனான நாள் இன்று!
ஆனால் டெல்லி மல்யுத்த வீரர்கள் குற்றம்சாட்டிய நிலையில், பாஜக எம்பி மீது 2 எஃப் ஐ ஆர் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. சட்டம் எல்லோருக்கும் பொதுவானது தான். குற்றம்சாட்டப்பட்டவரை கைது செய்தால் தான் அது குறித்து நான் பேசுவேன் என்பது தவறான ஒன்று. பிரபலமானவர்களுக்கு ஒரு சட்டம், சாதாரணமானவர்களுக்கு ஒரு சட்டம் என்றெல்லாம் கிடையாது.
இதுவரையில் ஜந்தர் மந்தரில் அவர்கள் போராட்டம் நடத்துவதற்கு முழு சுதந்திரமும் கொடுக்கப்பட்டுள்ளது. ஊடகங்களிலும், பத்திரிக்கையிலும் பேட்டி கொடுப்பதற்கும் இந்த ஜனநாயக நாட்டில் தான் உரிமை கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், நேற்றைய சம்பவத்தில் எந்தவித உரிமையும் பெறாமல் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பேரணியாக சென்றால், டெல்லி காவல் துறையினர் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னிக்கும் மழை பெய்தால் குஜராத் டைட்டன்ஸ்-க்கு தான் சாம்பியன்; சென்னைக்கு வாய்ப்பில்லை!
