மழைக்கு வாய்ப்பில்லை: இன்று 40 ஓவர்கள் போட்டி தானாம்: சென்னை - குஜராத் ரசிகர்கள் ஹேப்பி அண்ணாச்சி!
சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப் போட்டியில் மழை பெய்ய வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப் போட்டி நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடக்க இருந்தது. இரவு முழுவதும் பெய்த கன மழை காரணமாக போட்டி ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி இரு அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு நடக்க இருக்கிறது.
CSK vs GT IPL Finals 2023: ரயில் நிலையத்திலேயே படுத்து உறங்கிய சிஎஸ்கே ரசிகர்கள்!
நேற்றைப் போன்று இன்றும் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது. மேலும், இன்று இரவு முழவதும் மழை பெய்தால், குஜராத் டைட்டன்ஸ் அணி தான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், வானிலை ஆய்வு மையத்தின் கூற்றுப்படி, இன்று இரவு மழை பெய்ய வாய்ப்பில்லை என்று கணிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் அத்துமீறிய காவல்துறை: மல்யுத்த வீரர்களை துன்புறுத்தி கைது செய்யும் வீடியோ!
மாலை 6.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையில் 7 சதவிகிதம் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், இரவு 9.30 மணி வரை 5 சதவிகிதம் வாய்ப்பிருப்பதாகவும், இரவு 11.30 மணி வரையில் 4 சதவிகிதம் மட்டுமே மழைக்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஒருவேளை மழை பெய்தால் கூட போட்டி 20 ஓவர்கள் போட்டியாக இல்லாமல் ஓவர்கள் குறைத்து நடக்க வாய்ப்புள்ளது.
வரலாற்றில் மறக்க முடியாத டே: முதல் முறையாக குஜராத் டைட்டன்ஸ் சாம்பியனான நாள் இன்று!
உதாரணத்திற்கு மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிய 2ஆவது குவாலிஃபையர் போட்டியை சொல்லலாம். இதில், முதலில் மழை பெய்தது. இதனால் டாஸ் தாமதம் செய்யப்பட்டது. அதன் பிறகு மழை நின்றதைத் தொடர்ந்து போட்டி ஓவர்கள் குறைக்கப்படாமல் நடத்தப்பட்டது.
இன்னிக்கும் மழை பெய்தால் குஜராத் டைட்டன்ஸ்-க்கு தான் சாம்பியன்; சென்னைக்கு வாய்ப்பில்லை!
அதே போன்று இன்றைய போட்டியில் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அகமதாபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளின் ரெக்கார்ட்ஸை வைத்து பார்க்கும் போது இன்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெறக் கூடும் என்று கருதப்படுகிறது. கடந்த சீசனில் இதே நாளில் தான் குஜராத் டைட்டன்ஸ் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது.
தனது இருக்கைக்கு அருகில் அமர்ந்த காவலரை தாக்கும் பெண் ரசிகை: வைரலாகும் வீடியோ!