இன்னிக்கும் மழை பெய்தால் குஜராத் டைட்டன்ஸ்-க்கு தான் சாம்பியன்; சென்னைக்கு வாய்ப்பில்லை!
மழை காரணமாக நேற்றைய போட்டி இன்று ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், இன்றும் மழை நீடித்தால் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.
ஐபிஎல் இறுதிப் போட்டி நேற்றுடன் முடிய வேண்டிய நிலையில் மழையின் காரணமாக டாஸ் கூட போட முடியாத நிலையில் போட்டி இன்று ஒத்திவைக்கப்பட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2023 இறுதிப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடக்க இருந்தது.
தனது இருக்கைக்கு அருகில் அமர்ந்த காவலரை தாக்கும் பெண் ரசிகை: வைரலாகும் வீடியோ!
ஆனால், இரவு நேரத்தில் பெய்த அதிக கனமழையின் காரணமாகவே போட்டி இன்று ஒத்தி வைக்கப்பட்டது. நேற்று இரவு 9.40 வரைக்குள்ளாக போட்டி நடந்திருந்தால் 20 ஓவர்கள் முழுமையாக வீசப்பட்டிருக்கும். அதோடு, 9.45 மணி என்றால் 19 ஓவர்கள், 10 மணி என்றால் 17 ஓவர்கள், 10.30 மணி என்றால் 15 ஓவர்களாக குறைக்கப்படும் என்று பேசப்பட்டது. இறுதியாக 12.06 மணி வரையில் 5 ஓவர்கள் வரை வீசப்படும் என்ற நிலை இருந்தது.
IPL Final 2023 CSK vs GT Live: கொட்டி தீர்க்கும் மழை: போட்டி நாளைக்கு ஒத்தி வைப்பு!
ஆனால், மழை விட்டபாடில்லை. ஆதலால், போட்டி இன்று ஒத்தி வைக்கப்பட்டது. எனினும், அகமதாபாத்தில் இன்றும் கனமழை பெய்யக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இரவு நேரத்தில் டாஸ் கூட போட முடியாத நிலையில், மழை பெய்தால் இன்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.
எனக்கு கிடைக்காதது யாருக்கும் கிடைக்க கூடாது: வைரலாகும் முகேஷ் அம்பானி மீம்ஸ்!
ஒருவேளை சூப்பர் ஓவர் வீசுவதற்கு வாய்ப்புகள் இருந்தால், அதன் மூலமாக வெற்றி தீர்மானிக்கப்படும். அப்படியும் இல்லாதபட்சத்தில் தான் குஜராத் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரையில் 14 லீக் போட்டிகளில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 10 போட்டிகளில் வெற்றி பெற்று 20 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அதோடு, 2ஆவது குவாலிஃபையர் போட்டியிலும் மும்பை இந்தியன்ஸ் அணியை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது. இதன் காரணமாக புள்ளிப்பட்டியலின் படி அதிக போட்டிகளில் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். அப்படி அறிவிக்கப்பட்டால், 2ஆவது முறையாக குஜராத் டைட்டன்ஸ் அணி சாம்பியனாகும்.
மேலும், வரலாற்றில் முதல் முறையாக குஜராத் டைட்டன்ஸ் அணி சாம்பியனான நாள் இன்று. கடந்த 2022 ஆம் ஆண்டு மே 29 ஆம் தேதி நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் முறையாக சாம்பியனானது என்பது குறிப்பிடத்தக்கது.
கடைசி ஐபிஎல் போட்டியில் விளையாடும் அம்பத்தி ராயுடு; ஓய்வு பெற தயாரான ராயுடு!