Asianet News TamilAsianet News Tamil

கடைசி ஐபிஎல் போட்டியில் விளையாடும் அம்பத்தி ராயுடு; ஓய்வு பெற தயாரான ராயுடு!

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2023 இறுதிப் போட்டி தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் அம்பத்தி ராயுடுவின் கடைசி ஐபிஎல் போட்டி என்று செய்தி வெளியாகி வருகிறது.

CSK Player Ambati Rayudu is playing his last IPL match today against GT in IPL Final
Author
First Published May 28, 2023, 7:35 PM IST

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப் போட்டி தற்போது அகமதாபாத் மைதானத்தில் நடக்கிறது. மழை குறுக்கீடு காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த சீசன் தான் தோனிக்கு கடைசி சீசன் என்றும், இல்லை இல்லை அவர் அடுத்த சீசனிலும் விளையாடுவார் என்றெல்லாம் தகவல் வெளியானது.

ஐபிஎல் டிராபியில் உள்ள சமஸ்கிருத வாசகத்திற்கு என்ன அர்த்தம் தெரியுமா?

தான் அடுத்த சீசனில் விளையாடுவேனா, இல்லையா என்பதற்கு இன்னும் கால நேரம் இருக்கிறது. எனது உடல்நிலை குறித்து தான் முடிவு எடுக்கப்படும் என்று கடைசியாக நடந்த முதல் குவாலிஃபையர் போட்டியின் போது தோனி கூறியிருந்தார். இந்த நிலையில், சிஎஸ்கே அணியின் மற்றொரு வீரர் அம்பத்தி ராயுடு இந்த சீசனுடன் ஓய்வு பெறப் போவதாக செய்தி வெளியாகி வருகிறது.

ஃபேவரைட் ஐபிஎல் டீம் எது? கண்டிப்பா அது சென்னை டீம் தான்: வைரலாகும் சத்குரு வீடியோ!

இதுவரையில் 203 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள அம்பத்தி ராயுடு 4329 ரன்கள் வரையில் எடுத்துள்ளார். இதில் ஒரு சதம் மற்றும் 22 அரைசதங்கள் அடங்கும். 358 ரன்கள் மற்றும் 171 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். இந்த சீசனில் சென்னை அணியில் ரூ.6.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட அம்பத்தி ராயுடு இந்த சீசனில் 15 போட்டிகளில் 11 இன்னிங்ஸ் விளையாடி 139 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

ஐபிஎல் 2023 மூலமாக நீதா, முகேஷ் அம்பானிக்கு கிடைத்த வருமானம் ரூ.100 கோடி!

இதில் அதிகபட்சமாக 27 ரன்கள் எடுத்திருக்கிறார். 9 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் அடங்கும். இந்த நிலையில், இந்த சீசனுடன் இன்று நடக்கும் இறுதிப் போட்டியுடன் அம்பத்தி ராயுடு ஓய்வு பெறப் போவதாக அவர் கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தனது 250ஆவது ஐபிஎல் போட்டியில் சாதனை படைப்பாரா தோனி?

Follow Us:
Download App:
  • android
  • ios