அகமதாபாத்தில் விடாமல் பெய்து வரும் மழை காரணமாக போட்டி நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
- Home
- Sports
- Sports Cricket
- IPL Final 2023 CSK vs GT Highlights : கொட்டி தீர்க்கும் மழை: போட்டி நாளைக்கு ஒத்தி வைப்பு!
IPL Final 2023 CSK vs GT Highlights : கொட்டி தீர்க்கும் மழை: போட்டி நாளைக்கு ஒத்தி வைப்பு!

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான 16ஆவது ஐபிஎல் சீசனுக்கான இறுதிப் போட்டி அகமதாபாத்தில் பெய்து வரும் மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
CSK vs GT IPL Final: போட்டி நாளைக்கு ஒத்தி வைப்பு!
காவலரை தாக்கும் பெண் ரசிகை: வைரலாகும் வீடியோ!
நரேந்திர மோடி மைதானத்தில் தனது இருக்கைக்கு அருகில் அமர்ந்த காவலர தாக்கும் பெண்ணின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விடாமல் பெய்யும் மழை: நாளைக்கு ஒத்தி வைக்க வாய்ப்பு!
11 மணி வரையில் மழை நிற்கவில்லை என்றால் போட்டி நாளைக்கு ஒத்தி வைக்கப்படும்.
நரேந்திரமோடி ஸ்டேடியத்திற்கு வெளியில் திரண்ட சிஎஸ்கே ரசிகர்கள்!
சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப் போட்டியை பார்க்க லட்சக்கணக்கான சிஎஸ்கே ரசிகர்கள் மைதானத்திற்கு வெளியில் ஒன்று திரண்டுள்ளனர்.
மழையில் நனைந்தபடி காத்திருந்த சிஎஸ்கே ரசிகர்!
கொட்டும் மழையிலும் நனைந்தடி உட்கார்ந்திருந்த சிஎஸ்கே ரசிகர்!
மீண்டும் வந்த மழை: 20 ஓவர்கள் போட்டிக்கு வாய்ப்பில்லை!
மழை நின்ற சிறிது நேரத்திற்குள்ளாக மீண்டும் வந்த நிலையில், போட்டியின் ஓவர்கள் குறைக்கப்பட்டுள்ளது. 9.45 மணிக்கு தொடங்கப்பட்டால் 19 ஓவர்கள், 10 மணி என்றால், 17 ஓவர்கள், 10.30 மணி என்றால் 15 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடக்கும்.
ஓவர்கள் குறைக்கப்படுமா?
இன்னும் 20 நிமிடங்களுக்குள் போட்டி தொடங்கப்பட்டால் ஓவர்கள் குறைக்கப்பட வாய்ப்பில்லை. அதன் பிறகு போட்டி நடந்தால் ஓவர்கள் குறைக்கப்படும்.
மகிழ்ச்சி செய்தி: அகமதாபாத்தில் மழை நின்றுள்ளது!
மழை நின்று தார்பாய் எடுக்கப்பட்டு வருகிறது.
தோனியின் 250ஆவது ஐபிஎல் போட்டி மழையால் பாதிப்பு!
தோனியின் 350ஆவது ஒருநாள் போட்டி எப்படி மழையால் பாதிக்கப்பட்டதோ, அதே போன்று அவரது 250ஆவது ஐபிஎல் போட்டியும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.
சிஎஸ்கே போட்டியை காண அகமதாபாத் வந்த சதீஷ்!
சிஎஸ்கே – குஜராத் டைட்டன்ஸ் ஐபிஎல் இறுதிப் போட்டியை பார்ப்பதற்கு காமெடி நடிகர் சதீஷ் அகமதாபாத் வந்துள்ளார்.
வெளுத்து வாங்கும் மழை: வாட்ச் வீடியோ!
அகமதாபாத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், எப்படியாவது போட்டியை பார்த்துவிட வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
அகமதாபாத்தில் மொத்தமாக திரண்ட சிஎஸ்கே ரசிகர்கள்!
போட்டியை காண திரண்ட சிஎஸ்கே ரசிகர்கள்!
மழையில் சொட்ட சொட்ட நனையும் ஆசிஷ் நெஹ்ரா!
மழையில் சந்தோஷமாக நனையும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளர் ஆசிஷ் நெஹ்ரா.
5 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்தப்படுமா?
5 ஓவர்கள் கொண்ட போட்டிக்கான கடைசி நேரம் நள்ளிரவு 12.06 மணி.

போட்டி நாளைக்கு ஒத்தி வைக்கப்படுமா?
தொடர்ந்து மழை பெய்து வந்தால் ஐபிஎல் இறுதிப் போட்டி நாளைக்கு ஒத்தி வைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஓய்வு பெறப் போகும் அம்பத்தி ராயுடு!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அம்பத்தி ராயுடு இன்று நடக்கும் ஐபிஎல் இறுதிப் போட்டியுடன் ஓய்வு பெறப் போவதாக கூறியதாக செய்திகள் வெளியாகி வருகிறது. கடைசி ஐபிஎல் போட்டியில் விளையாடும் அம்பத்தி ராயுடு; ஓய்வு பெற தயாரான ராயுடு!

மழை காரணமாக ஓவர்கள் குறைக்கப்படுமா?
இரவு 9.40 மணிக்குள்ளாக போட்டி தொடங்கப்பட்டால் ஓவர்கள் குறைக்கப்பட வாய்ப்பில்லை.
அகமதாபாத்தில் சாதிக்குமா சென்னை?
இதுவரையில் அகமதாபாத் மைதானத்தில் ஒரு போட்டியில் கூட சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றதில்லை.
![]()
அதிக ரன்கள் குவித்து ஆரஞ்சு கேப் பெற்றுள்ள சுப்மன் கில்!
குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் 16 போட்டிகள் விளையாடி 851 ரன்கள் குவித்து முதலிடம் பிடித்துள்ளார். இதன் காரணமாக ஆரஞ்சு கேப் பெற்றுள்ளார். கடைசியாக 4 போட்டிகளில் 3 முறை சதம் விளாசியுள்ளார்.

ஐபிஎல் 2023 ஃபைனல்: நரேந்திரமோடி மைதானத்தில் மழை!
அகமதாபாத் மைதானத்தில் மழை பெய்து வருவதால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.