Asianet News TamilAsianet News Tamil

இது சேப்பாக்கம் இல்ல, நரேந்திர மோடி ஸ்டேடியம் – CSK vs GT போட்டிக்காக திரண்ட லட்சக்கணக்கான சிஎஸ்கே ரசிகர்கள்!

நரேந்திர மோடி மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி நடக்கும் நிலையில், அதற்காக மஞ்சள் உடை அணிந்து லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வந்துள்ளனர்.

CSK fans gathered outside the Narendra Modi Stadium for CSK vs GT IPL Final 2023
Author
First Published May 28, 2023, 10:20 PM IST

ஐபிஎல் 16ஆவது சீசன் இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் ஃபைனல் 2023 மழை குறுக்கீடு காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளது. குஜராத்தின் கோட்டை என்று சொல்லப்படும் அகமதாபாத்தில் உள்ள விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலலையில் நரேந்திர மோடி மைதானம் தார்பாய் கொண்டு மூடப்பட்டுள்ளது.

கடைசி ஐபிஎல் போட்டியில் விளையாடும் அம்பத்தி ராயுடு; ஓய்வு பெற தயாரான ராயுடு!

இதுவரையில் நடந்த 14 லீக் போட்டிகளில் குஜராத் டைட்டன்ஸ் அணி 10 போட்டிகளில் வெற்றி பெற்றது. இதையடுத்து நடந்த முதல் குவாலிஃபையர் சுற்று போட்டியில் சிஎஸ்கே அணியிடம் தோற்று 2ஆவது குவாலிஃபையர் போட்டியில் விளையாடியது. இதில், மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டி முன்னேறியது.

ஐபிஎல் டிராபியில் உள்ள சமஸ்கிருத வாசகத்திற்கு என்ன அர்த்தம் தெரியுமா?

இதே போன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய ஐபிஎல் 14 லீக் போட்டிகளில் 8ல் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து நடந்த முதல் குவாலிஃபையர் போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதன் மூலமாக 10ஆவது முறையாக சிஎஸ்கே இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது.

ஃபேவரைட் ஐபிஎல் டீம் எது? கண்டிப்பா அது சென்னை டீம் தான்: வைரலாகும் சத்குரு வீடியோ!

கடந்த சீசனில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய குஜராத் டைட்டன்ஸ் 2ஆவது முறையாக இன்றைய போட்டியில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பொதுவாக சென்னை போட்டி என்றால் தான் தோனிக்காகவும், சிஎஸ்கே அணிக்காகவும் லட்சக்கணக்கான ரசிகர்கள் வருவார்கள். ஆனால், அதையும் தாண்டி நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கும் இறுதிப் போட்டிக்காக மைதானத்திற்கு வெளியில் லட்சக்கணக்கான ரசிகர்கள் Yellow உடையில் ஒன்று திரண்டு வந்துள்ளனர்.

தனது 250ஆவது ஐபிஎல் போட்டியில் சாதனை படைப்பாரா தோனி?

இது தொடர்பான புகைப்படமும், வீடியோவும் வைரலாகி வருகிறது. இது ஒரு புறம் இருக்க நரேந்திரமோடி மைதானத்தில் மழை கொட்டி தீர்க்கும் நிலையில், மைதானத்தில் திரண்ட ரசிகர்கள் மழையையும் பொருட்படுத்தாமல் சிஎஸ்கே சிஎஸ்கே சிஎஸ்கே என்று கோஷமிட்டு வருகின்றனர்.

தோனியின் கடைசி 350ஆவது ODI மழையால் பாதிப்பு, 250ஆவது ஐபிஎல் ஃபைனல் மழையால் பாதிப்பு!

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios