தோனியின் கடைசி 350ஆவது ODI மழையால் பாதிப்பு, 250ஆவது ஐபிஎல் ஃபைனல் மழையால் பாதிப்பு!
தோனியின் கடைசி ஒருநாள் போட்டி மழையால் பாதிக்கப்பட்டது போன்று அவரது 250ஆவது ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி ஒரு நாள் உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணிக்காக பெற்றுக் கொடுத்தார். அதோடு ஆசியா கோப்பையை 2 முறையும், பார்டர் கவாஸ்கர் டிராபியையும் 3 முறையும் வென்று கொடுத்துள்ளார். உலகமே கொண்டாடும் ஒரு கிரிக்கெட் வீரராக திகழ்கிறார்.
கடைசி ஐபிஎல் போட்டியில் விளையாடும் அம்பத்தி ராயுடு; ஓய்வு பெற தயாரான ராயுடு!
கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி வங்கதேசத்திற்கு எதிரான ஒரு நாள் போட்டியின் மூலமாக ஒரு நாள் கிரிக்கெட்டில் அறிமுகமானார். அதன்பிறகு 350 ஒரு நாள் போட்டிகள் வரையில் விளையாடியுள்ளார். 350 ஒரு நாள் போட்டிகள் விளையாடிய 2ஆவது வீரர் என்ற சாதனையை தோனி படைத்தார். இதற்கு முன்னதாக சச்சின் டெண்டுல்கர் 463 ஒரு நாள் போட்டிகள் விளையாடியுள்ளார்.
ஐபிஎல் டிராபியில் உள்ள சமஸ்கிருத வாசகத்திற்கு என்ன அர்த்தம் தெரியுமா?
கடைசியாக கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் தோனி கடைசியாக விளையாடினார். கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் தேதி மான்செஸ்டரில் நியூசிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் அரையிறுதிப் போட்டியில் பங்கேற்றார்.
ஐபிஎல் 2023 மூலமாக நீதா, முகேஷ் அம்பானிக்கு கிடைத்த வருமானம் ரூ.100 கோடி!
இதுதான் தோனியி கடைசி ஒரு நாள் போட்டி. இந்தப் போட்டியின் போது மழை குறுக்கீடு இருந்தது. அதன்பிறகு போட்டி தொடங்கப்பட்டது. இதில், நியூசிலாந்து 239 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய இந்தியா 221 ரன்கள் மட்டுமே எடுத்து 18 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் தோனி 50 ரன்கள் எடுத்து ரன் அவுட்டில் வெளியேறினார்.
அன்று நடந்தது போன்று இன்றும் நடந்துள்ளது. ஆம், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப் போட்டி இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடக்க இருந்தது. ஆனால், தொடர்ந்து கன மழை பெய்து வரும் நிலையில், டாஸ் தாமதம் ஏற்பட்டுள்ளது. இது, தோனியின் 250ஆவது ஐபிஎல் போட்டி ஆகும்.
தனது 250ஆவது ஐபிஎல் போட்டியில் சாதனை படைப்பாரா தோனி?
ஒருவேளை அடுத்த சீசனில் தோனி விளையாடவில்லை என்றால், இதுதான் அவரது கடைசி ஐபிஎல் சீசனாகும். ஆனால், இது குறித்து தோனி எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. இன்றைய போட்டி முழுவதும் மழை பெய்தால் போட்டி நாளைக்கு ஒத்திவைக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஆனால், நாளையும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இரவு 9.40 மணிக்குள்ளாக மழை நின்று போட்டி தொடங்கப்பட்டால் ஓவர்கள் குறைக்கப்பட வாய்ப்பில்லை.
நள்ளிரவு 12.06 மணி வரையில் தான் கடைசி வாய்ப்பு. அதற்குள்ளாக மழை விட்டால் 5 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெறும். இன்று முழுவதும் மழை விடவில்லை என்றால் போட்டி நாளைக்கு ஒத்தி வைக்கப்படும்.