சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான போட்டி மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் முகேஷ் அம்பானியை வைத்து உருவாக்கப்பட்ட மீம்ஸ் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2023 இறுதிப் போட்டி இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடக்க இருந்தது. ஆனால், அகமதாபாத்தில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக இதுவரையில் போட்டி நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படவில்ல. எனினும், நள்ளிரவு 12.06 மணி வரையில் போட்டி நடப்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன. அதையும் மீறி விடாமல் மழை பெய்தால் போட்டி நாளைக்கு ஒத்தி வைக்கப்படும் என்று கூறப்படுகிறது.
ஆனால், நாளையும் அகமதாபாத் மைதானத்தில் கனமழை பெய்யக் கூடும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்த 16ஆவது ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணி கடைசி லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் தோல்வி அடைந்ததன் மூலமாக பிளே ஆஃப் வந்த மும்பை இந்தியன்ஸ் அணி எலிமினேட்டரில் வெற்றி பெற்றது.
கடைசி ஐபிஎல் போட்டியில் விளையாடும் அம்பத்தி ராயுடு; ஓய்வு பெற தயாரான ராயுடு!
இதையடுத்து, அகமதாபாத்தில் நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த 2ஆவது குவாலிஃபையர் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் 62 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து ஐபிஎல் சீசனிலிருந்து வெளியேறியது. இதன் காரணமாக குஜராத் டைட்டன்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
ஐபிஎல் டிராபியில் உள்ள சமஸ்கிருத வாசகத்திற்கு என்ன அர்த்தம் தெரியுமா?
அகமதாபாத்தில் நரேந்திர மோடி மைதானத்தில் தான் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி நடக்க இருந்தது. ஆனால், இங்கு விடாமல் கனமழை பெய்து வரும் நிலையில் போட்டியின் ஓவர்கள் குறைக்கப்படும் இல்லையென்றால் நாளைக்கு ஒத்தி வைக்கவும் வாய்ப்பிருக்கிறது.
ஃபேவரைட் ஐபிஎல் டீம் எது? கண்டிப்பா அது சென்னை டீம் தான்: வைரலாகும் சத்குரு வீடியோ!
இந்த நிலையில், எனக்கு கிடைக்காதது, யாருக்கும் கிடைக்காது என்று கூறுவது போன்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் முகேஷ் அம்பானி தீயணைப்பு உடையில் கையில் தண்ணீர் பீச்சி அடிப்பது போன்ற மீம்ஸ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
