டெல்லியில் அத்துமீறிய காவல்துறை: மல்யுத்த வீரர்களை துன்புறுத்தி கைது செய்யும் வீடியோ!
நீதி கிடைக்க போராடி வரும் மல்யுத்த வீரர்களை காவல்துறையினர் துன்புறுத்தி கைது செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் தெரிவித்தனர். ஆனால், இந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் கடந்த ஜனவரி மாதம் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தினர்.
வரலாற்றில் மறக்க முடியாத டே: முதல் முறையாக குஜராத் டைட்டன்ஸ் சாம்பியனான நாள் இன்று!
இதைத்தொடர்ந்து இந்த விவகாரத்தில் தலையிட்ட மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையில் 6 பேர் கொண்ட விசாரணை குழுவை அமைத்தது. இந்த குழு விசாரணை நடத்தி தனது அறிக்கையை விளையாட்டுத்துறை அமைச்சகத்திடம் வழங்கியது. இதன் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
இன்னிக்கும் மழை பெய்தால் குஜராத் டைட்டன்ஸ்-க்கு தான் சாம்பியன்; சென்னைக்கு வாய்ப்பில்லை!
மேலும் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது வீராங்கனைகள் டெல்லி காவல் நிலையத்தில் அளித்த புகார் தொடர்பாக எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதை கண்டித்தும் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் கடந்த ஏப்ரல் 23-ம் தேதி மீண்டும் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தை தொடங்கினர்.
தனது இருக்கைக்கு அருகில் அமர்ந்த காவலரை தாக்கும் பெண் ரசிகை: வைரலாகும் வீடியோ!
டெல்லி ஜந்தர் மந்திர் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் வினேஷ் போகத், சாக்சி மாலிக் உள்ளிட்ட வீராங்கனைகள் பலர் கலந்து கொண்டனர். பிரிஜ் பூஷன் சரண் மீது மல்யுத்த வீராங்கனைகள் கூறிய பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக டெல்லி கனோட் ப்ளேஸ் காவல் நிலையத்தில் இரண்டு எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் ஒன்று தான், பிரிஜ் பூஷன் சிங்க் மீதான பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகள் பாதுகாப்பு (போக்சோ) சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. வரும் ஜூன் 5ஆம் தேதி அயோத்தியா பேரணியின் போது தன் மீது சுமத்தப்பட்ட போக்சோ சட்டத்தை மாற்றியமைக்க அரசை வலியுறுத்துவோம் என்றும், இது பொய்யான வழக்கு என்றும் பிரிஜ் பூஷன் சரண் சிங் கூறியிருந்தார்.
IPL Final 2023 CSK vs GT Live: கொட்டி தீர்க்கும் மழை: போட்டி நாளைக்கு ஒத்தி வைப்பு!
டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் நேற்று திறந்துவைக்கப்பட்டது. இந்த நிலையில், ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்த மல்யுத்த வீரர், வீராங்கனைகளை டெல்லி காவல் துறையினர் துன்புறுத்தி, வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று போலீஸ் வாகனத்தில் ஏற்றிச் செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ குறித்து விளையாட்டு வீரர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில், இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் கூறியிருப்பதாது: எங்களது விளையாட்டு வீரர்களின் காட்சிகளை கண்டு நான் மிகவும் வருத்தப்படுகிறேன். தயவு செய்து இந்த பிரச்சனையை விரைவில் தீர்க்க வேண்டும் என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.