வரலாற்றில் மறக்க முடியாத டே: முதல் முறையாக குஜராத் டைட்டன்ஸ் சாம்பியனான நாள் இன்று!
கடந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் முறையாக சாம்பியனான நாள் தான் இன்று.
கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் 8 அணிகள் மட்டுமே விளையாடிய நிலையில் ஒவ்வொரு ஆண்டும் பல மாறுதல்கள் நடந்து தற்போது 10 அணிகள் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகின்றன. கடந்த 2022 ஆம் ஆண்டு 15ஆவது ஐபிஎல் சீசனில் முதல் முறையாக குஜராத் டைட்டன்ஸ் அணி இடம் பெற்று விளையாடியது.
இன்னிக்கும் மழை பெய்தால் குஜராத் டைட்டன்ஸ்-க்கு தான் சாம்பியன்; சென்னைக்கு வாய்ப்பில்லை!
இதில், இறுதிப் போட்டிக்கு சென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி, இறுதிப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்கொண்டது. கடந்த 2022 ஆம் ஆண்டு மே 29 ஆம் தேதி நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் முதலில் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 22 ரன்கள் எடுத்தார்.
தனது இருக்கைக்கு அருகில் அமர்ந்த காவலரை தாக்கும் பெண் ரசிகை: வைரலாகும் வீடியோ!
இதையடுத்து ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 18.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. இதே போன்று தற்போது ஐபிஎல் 16ஆவது சீசனில் இறுதிப் போட்டிக்கு வந்துள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி, சென்னை அணியை எதிர்கொள்கிறது.
IPL Final 2023 CSK vs GT Live: கொட்டி தீர்க்கும் மழை: போட்டி நாளைக்கு ஒத்தி வைப்பு!
நேற்று அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இரு அணிகளுக்கும் இடையிலான ஐபிஎல் இறுதிப் போட்டி நடக்க இருந்தது. ஆனால் கன மழை காரணமாக போட்டி இன்று மாற்றப்பட்டது. இன்று இரவு நடக்கும் போட்டியிலும் மழை பெய்யக் கூடும் என்று கூறப்படுகிறது. அப்படி மழை பெய்தால், குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். இதுவரையில் 14 லீக் போட்டிகளில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 10 போட்டிகளில் வெற்றி பெற்று 20 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
எனக்கு கிடைக்காதது யாருக்கும் கிடைக்க கூடாது: வைரலாகும் முகேஷ் அம்பானி மீம்ஸ்!
அதோடு, 2ஆவது குவாலிஃபையர் போட்டியிலும் மும்பை இந்தியன்ஸ் அணியை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது. இதன் காரணமாக புள்ளிப்பட்டியலின் படி அதிக போட்டிகளில் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். அப்படி அறிவிக்கப்பட்டால், 2ஆவது முறையாக குஜராத் டைட்டன்ஸ் அணி சாம்பியனாகும்.