CSK vs GT IPL Finals 2023: ரயில் நிலையத்திலேயே படுத்து உறங்கிய சிஎஸ்கே ரசிகர்கள்!

சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான நேற்றைய போட்டி மழையால் தள்ளி வைக்கப்பட்ட நிலையில் வெளியூரிலிருந்து வந்த சிஎஸ்கே ரசிகர்கள் ரயில் நிலையத்திலேயே படுத்து தூங்கியுள்ளனர்.

CSK Fans sleeping on railway stations and road pavements due to rain in ahmedabad

குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2023 ஃபைனல் நேற்று நடக்க இருந்தது. ஆனால், டாஸ் கூட போட முடியாத அளவிற்கு அகமதாபாத்தில் மழை பெய்தது. எப்படியாவது மழை நின்றால் போட்டியை நடத்திவிடாலம் என்று ஆலோசித்து வந்த நிலையில், கடைசி வரை மழை நிற்கவில்லை. இதன் காரணமாக போட்டி இன்றைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

டெல்லியில் அத்துமீறிய காவல்துறை: மல்யுத்த வீரர்களை துன்புறுத்தி கைது செய்யும் வீடியோ!

வழக்கம் போன்று இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2023 இறுதிப் போட்டி நடக்க இருக்கிறது. ஆனால் இன்றும் மழை பெய்யக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இன்றும் மழையின் காரணமாக போட்டி நடக்கவில்லை என்றால் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு தான் சாம்பியன்ஸ் டிராபி வழங்கப்படும்.

வரலாற்றில் மறக்க முடியாத டே: முதல் முறையாக குஜராத் டைட்டன்ஸ் சாம்பியனான நாள் இன்று!

ஐபிஎல் விதிமுறையின் படி குஜராத் டைட்டன்ஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். எப்படியும் போட்டியை பார்த்துவிட வேண்டும் என்று ஆவலுடன் வந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. முதல் முறையாக ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் இந்தப் போட்டி தான் மழையின் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இன்னிக்கும் மழை பெய்தால் குஜராத் டைட்டன்ஸ்-க்கு தான் சாம்பியன்; சென்னைக்கு வாய்ப்பில்லை!

 

 

விமானம், ரயில், ஹோட்டல், டிக்கெட் என்று செலவு செய்து வந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான். அதோடு மழையின் நனைந்தபடியே திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், தான் நேரம் மற்றும் மழையின் காரணமாக திரும்பி செல்ல ரயில் இல்லாமல் சிஎஸ்கே ரசிகர்கள் ரயில் நிலையத்திலேயே படுத்து உறங்கிய புகைப்படமும், வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தனது இருக்கைக்கு அருகில் அமர்ந்த காவலரை தாக்கும் பெண் ரசிகை: வைரலாகும் வீடியோ!

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios