சியட் யுடிடி டேபிள் டென்னிஸ் லீக் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பால்கன்ஸ் டிடிசியை வீழ்த்தி டபாங் ஸ்மாஷர்ஸ் சாம்பியன் வென்று அசத்தியது.
 
தங்க மங்கை மனிகா பத்ரா, சென்னை வீரர் சதயன் ஆகியோரின் அபார ஆட்டத்தால் ஸ்மாஷர்ஸ் வெற்றி பெற்றது.

சியட் யுடிடி டேபிள் டென்னிஸ் லீக் போட்டி கொல்கத்தாவில் நடைபெற்றது. இதன் இறுதி ஆட்டத்தில் சென்னையின் கேப்டன் சத்யன் 2-1 என்ற கணக்கில் அல்வரோ ரொபுள்ஸை தோற்கடித்தார்.

அதேபோன்று, மனிகா பத்ரா 3-0 என்ற செட் கணக்கில் உலகின் 30-ஆம் நிலை வீராங்கனையான மடில்டாவை வீழ்த்தினார். யோஷிடா மஸாகி 2-1 என்ற கணக்கில் சனில் ஷெட்டியை வென்றார்.

மற்றொரு பிரிவான இரட்டையர் பிரிவில் சத்யன் - சகுரா இணை சனில் ஷெட்டி - பெர்ணாடிடேட் இணையை வீழ்த்தியது.

பால்கன்ஸ் அணி கேப்டன் லியாம் பிட்ச்போர்ட் 2-1 என செட்ரிக்கை வென்றார். இறுதியில் 11-7 என்ற ஆட்டக்கணக்கில் பால்கன்ஸை வீழ்த்தி ஸ்மார்ஷர்ஸ் வென்றது.

சாம்பியன் பட்டம் வென்ற ஸ்மார்ஷர்ஸ் அணிக்கு ரூ.1 கோடியும், இரண்டாம் இடம் பெற்ற பால்கன்ஸ் அணிக்கு ரூ.75 இலட்சமும் பரிசாக வழங்கப்பட்டன