Asianet News TamilAsianet News Tamil

ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை: கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணி அறிவிப்பு

ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடருக்கான கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
 

cristiano ronaldo lead portugal squad announced for fifa world cup
Author
First Published Nov 13, 2022, 8:44 PM IST

ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடர் வரும் 20ம் தேதி கத்தாரில் தொடங்குகிறது. உலகின் மிகப்பெரும் விளையாட்டு திருவிழா கால்பந்து உலக கோப்பை. சர்வதேச அளவில் கிரிக்கெட்டை விட அதிகளவிலான ரசிகர்களை பெற்ற விளையாட்டு கால்பந்து தான். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடருக்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

32 அணிகளும் 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு, ஒரு குழுவில் 4 அணிகள் என பிரித்து அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது. 

குரூப் ஏ - கத்தார், ஈகுவடார், செனெகல், நெதர்லாந்து
குரூப் பி - இங்கிலாந்து, ஈரான், அமெரிக்கா, வேல்ஸ்
குரூப் சி - அர்ஜெண்டினா, சௌதி அரேபியா, போலந்து, மெக்ஸிகோ
குரூப் டி - ஃபிரான்ஸ், ஆஸ்திரேலியா, டென்மார்க், துனிசியா
குரூப் இ - ஸ்பெயின், கோஸ்டாரிக்கா, ஜெர்மனி, ஜப்பான்

FIFA World Cup: தங்களது கடைசி உலக கோப்பையை ஆடும் 5 லெஜண்ட் கால்பந்து வீரர்கள்
குரூப் எஃப் - கனடா, பெல்ஜியம், மொராக்கோ, குரோஷியா
குரூப் ஜி - பிரேசில், செர்பியா, சுவிட்சர்லாந்து, கேம்ரூன்
குரூப் ஹெச் - போர்ச்சுகல், கானா, உருகுவே, தென்கொரியா

ஃபிஃபா கால்பந்து உலக கோப்பைக்கான அணிகள் அறிவிக்கப்பட்டுவருகின்றன. சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரொனால்டோ தலைமையில் 26 வீரர்களை கொண்ட போர்ச்சுகல் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு உலகால் கொண்டாடப்படும் தலைசிறந்த கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு இதுவே கடைசி கால்பந்து உலக கோப்பையாக இருக்கலாம் என்பதால், இந்த உலக கோப்பையை தனது நாட்டிற்கு வென்று கொடுத்தே தீரும் உறுதியில் உள்ளார் ரொனால்டோ.

ஃபிஃபா கால்பந்து உலக கோப்பைக்கான போர்ச்சுகல் அணி:

கோல்கீப்பர்கள் - டியாகோ கோஸ்டா, ஜோஸ் எஸ்.ஏ, ரூய் பட்டாரிகோ

பின்கள வீரர்கள் - ஜாவோ கேன்செலோ, டியாகோ டாலோட், பெப், ரூபென் டியாஸ், டேனிலோ பெரைரா, ஆண்டானியோ சில்வா, நூனோ மெண்டிஸ், ஆர்.கெரெரியோ.

நடுக்கள வீரர்கள் - ப்ருனோ ஃபெர்னாண்டஸ், பெர்னார்டோ சில்வா, ரூபென் நீவ்ஸ், வில்லியம், பல்ஹின்ஹா, விடின்ஹா, ஓட்டாவியோ, மேத்யூஸ் நன்ஸ், ஜாவோ மரியோ.

ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை போட்டிகளை எந்த சேனல் & ஆன்லைனில் பார்க்கலாம்..? முழு ஒளிபரப்பு விவரம்

முன்கள வீரர்கள் - கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஜாவோ ஃபெலிக்ஸ், ரஃபேல் லியோ, ரிகார்டோ ஹார்டா, ஆண்ட்ரே சில்வா, கான்கலோ ராமாஸ்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios