தற்போது நடந்து வரும் ரஞ்சி டிராபி தொடருடன் பெங்கால் அணி வீரர் மனோஜ் திவாரி தனது ஓய்வை அறிவிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 13 ஆம் தேதி தொடங்கிய உத்தரப்பிரதேசம் மற்றும் பெங்கால் அணிகளுக்கு இடையிலான ரஞ்சி டிராபி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த உத்தரப்பிரதேச அணி முதல் இன்னிங்ஸில் 198 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை ஆடிய பெங்கால் அணி 169 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இந்த அணிக்கு கேப்டனாக இருந்த அபிமன்யூ ஈஸ்வரன் இந்த தொடரிலிருந்து வெளியேறியதன் காரணமாக மனோஜ் திவாரி கேப்டனாக செயல்பட்டார். 29 ரன்கள் முன்னிலையில் 2ஆவது இன்னிங்ஸை தொடங்கிய உத்திரப்பிரதேச அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 227 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதைத் தொடர்ந்து 256 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு பெங்கால் அணி விளையாடியது. இதில் கௌசிக் கோஷ் (69), அனுஷ்டப் மஜூம்தர் (83) மற்றும் கேப்டன் மனோஜ் திவாரி (60 நாட் அவுட்) ஆகியோர் அதிக ரன்கள் சேர்க்க பெங்கால் அணி 4 விக்கெட் இழந்து 259 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.

IPL 2023 Mini Auction: 10 ஐபிஎல் அணிகளும் தக்கவைத்த வீரர்கள்.. கையிருப்பு தொகை விவரம்

இது குறித்து மனோஜ் திவாரி கூறுகையில், நாங்கள் ஒரு சாம்பியனைப் போன்று விளையாடி வெற்றி பெற்றோம். தற்போது வரை பெங்கால் அணி இரண்டு முறை மட்டுமே ரஞ்சி டிராபியை கைப்பற்றியிருக்கிறது. அதுவும், கடந்த 1938 - 1939 மற்றும் 1989 - 1990 ஆகிய ஆண்டுகளில் தான் டிராபியை கைப்பற்றியிருக்கிறது. அதன் பிறகு கைப்பற்றியதில்லை. கடந்த 2018 - 19 ஆம் ஆண்டுகளில் பெங்கால் அணிக்கு கேப்டனாக இருந்த போது, என்னால், ஒரு நாள் மற்றும் டி20 தொடருக்கும் கேப்டனாக செயல்பட முடியும் என்று கூறினேன். ஆனால், அதற்கு எனக்கு மறுப்பு தான் தெரிவித்தார்கள். ஆனால், தற்போது அபிமன்யூ இல்லாதது, இக்கட்டான சூழலில் முடிவு எடுப்பது எப்படி கடினமாக இருக்கிறது என்று தெரிகிறது.

PAK vs ENG: பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்யுமா இங்கிலாந்து? 3வது டெஸ்ட் போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

எப்படியாவது இந்த ஆண்டு பெங்கால் அணி ரஞ்சி டிராபியை வாங்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக தெரிவித்துள்ளார். நடப்பு ரஞ்சி டிராபி தொடருடன் மனோஜ் திவாரி ஓய்வு அறிவிக்க இருப்பதாக சூசகமாக தெரிவித்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது. வரும், 20 ஆம் தேதி ஹிமாச்சலபிரதேசம் மற்றும் பெங்கால் அணிகளுக்கு இடையிலான போட்டி ஈடான் ஹார்டன் மைதானத்தில் நடக்க இருக்கிறது.

ரிஷப் பண்ட்டின் உடல் எடை தான் அவரது பலவீனம்.. உடல் எடையை குறைத்தே ஆகணும்..! சல்மான் பட் ஓபன் டாக்