IPL Mini Auction 2023: 10 ஐபிஎல் அணிகளும் தக்கவைத்த வீரர்கள்.. கையிருப்பு தொகை விவரம்

ஐபிஎல் 16வது சீசனுக்கான மினி ஏலம் வரும் 23ம் தேதி கொச்சியில் நடக்கும் நிலையில், ஏலத்திற்கு முன் ஐபிஎல் அணிகள் தக்கவைத்த வீரர்கள் மற்றும் கையிருப்பில் இருக்கும் தொகை விவரங்களை பார்ப்போம்.
 

ipl 2023 mini auction here is the full details of teams retained players and remaining purse

ஐபிஎல்லில் 15 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில், 16வது சீசன் அடுத்த ஆண்டு நடக்கவுள்ளது. கடந்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடந்ததால் அடுத்த சீசனுக்கான ஏலம் மினி ஏலமாக நடக்கவுள்ளது. வரும் 23ம் தேதி 16வது சீசனுக்கான மினி ஏலம் கொச்சியில் நடக்கிறது. 10 ஐபிஎல் அணிகளும் தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கும் வீரர்கள் பட்டியலை ஏற்கனவே அறிவித்துவிட்டன.

ஐபிஎல் 16வது சீசனுக்கான மினி ஏலத்தில் 714 இந்திய வீரர்கள் மற்றும் 277 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 991 வீரர்கள் விண்ணப்பித்தனர். அவர்களில் 405 வீரர்கள் இறுதி செய்யப்பட்டு, அந்த 405 வீரர்களும் ஏலம் விடப்படவுள்ளனர்.

இந்நிலையில், ஐபிஎல் அணிகள் தக்கவைத்துள்ள வீரர்கள் மற்றும் அணிகளின் கையிருப்பில் இருக்கும் தொகை விவரங்களை பார்ப்போம்.

சிஎஸ்கே அணி:

தக்கவைத்த வீரர்கள் - தோனி, டெவான் கான்வே, மொயின் அலி, ஷிவம் துபே, ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, அம்பாதி ராயுடு, மஹீஷ் தீக்‌ஷனா, ட்வைன் பிரிட்டோரியஸ், சேனாபதி, மிட்செல் சாண்ட்னெர், மதீஷா பதிரனா, துஷார் தேஷ்பாண்டே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், முகேஷ் சௌத்ரி, பிரசாந்த் சோலங்கி, தீபக் சாஹர், சிமர்ஜீத் சிங்.

கையிருப்பு தொகை -  ரூ.20.45 கோடி

ரிஷப் பண்ட்டின் உடல் எடை தான் அவரது பலவீனம்.. உடல் எடையை குறைத்தே ஆகணும்..! சல்மான் பட் ஓபன் டாக்

மும்பை இந்தியன்ஸ் அணி:

தக்கவைத்த வீரர்கள் - ரோஹித் சர்மா, இஷான் கிஷன், ஜஸ்ப்ரித் பும்ரா, சூர்யகுமார் யாதவ், ஜோஃப்ரா ஆர்ச்சர், டிம் டேவிட், டிவால்ட் பிரெவிஸ், திலக் வர்மா, ஜேசன் பெஹ்ரண்டார்ஃப்.

கையிருப்பு தொகை - ரூ.20.55 கோடி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி:

தக்கவைத்த வீரர்கள் - ஷ்ரேயாஸ் ஐயர், நிதிஷ் ராணா, வெங்கடேஷ் ஐயர், ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், உமேஷ் யாதவ், டிம் சௌதி, ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி, அனுகுல் ராய், ரிங்கு சிங்.

கையிருப்பு தொகை - ரூ.7.05 கோடி

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:

தக்கவைத்த வீரர்கள் - அப்துல் சமாத், எய்டன் மார்க்ரம், ராகுல் திரிபாதி, க்ளென் ஃபிலிப்ஸ், அபிஷேக் ஷர்மா, மார்கோ யான்சென், வாஷிங்டன் சுந்தர், ஃபஸல்ஹக் ஃபரூக்கி, கார்த்திக் தியாகி, புவனேஷ்வர் குமார், டி.நடராஜன், உம்ரான் மாலிக்.

கையிருப்பு தொகை - ரூ.42.25 கோடி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

தக்கவைத்த வீரர்கள் - ஃபாஃப் டுப்ளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, சுயாஷ் பிரபுதேசாய், ரஜாத் பட்டிதர், தினேஷ் கார்த்திக், அனுஜ் ராவத், ஃபின் ஆலன், க்ளென் மேக்ஸ்வெல், வனிந்து ஹசரங்கா, ஷபாஸ் அகமது, ஹர்ஷல் படேல், டேவிட் வில்லி, கரன் ஷர்மா, மஹிபால் லோம்ரார், முகமது சிராஜ், ஜோஷ் ஹேசில்வுட், சித்தார்த் கௌல், ஆகாஷ் தீப்.

கையிருப்பு தொகை - ரூ.8.75 கோடி

டெல்லி கேபிடள்ஸ் அணி:

தக்கவைத்த வீரர்கள் - ரிஷப் பண்ட் (கேப்டன்), டேவிட் வார்னர், பிரித்வி ஷா, ரிப்பால் படேல், ரோவ்மன் பவல், சர்ஃபராஸ் கான், யஷ் துல், மிட்செல் மார்ஷ், லலித் யாதவ், அக்ஸர் படேல், அன்ரிக் நோர்க்யா, சேத்தன் சக்காரியா, கமலேஷ்  நாகர்கோட்டி, கலீல் அகமது, லுங்கி இங்கிடி, முஸ்தாஃபிசுர் ரஹ்மான், குல்தீப் யாதவ், பிரவீன் துபே, விக்கி ஆஸ்ட்வால்.

அமான் கான் - கேகேஆரிடமிருந்து வாங்கப்பட்ட வீரர்

கையிருப்பு தொகை - ரூ.19.45 கோடி

டி20 உலக கோப்பையில் அந்த வீரரை எடுக்காதது தான் இந்திய அணி செய்த மாபெரும் தவறு..! பாக்., முன்னாள் வீரர் அதிரடி

பஞ்சாப் கிங்ஸ் அணி:

தக்கவைத்த வீரர்கள் - ஷிகர் தவான் (கேப்டன்), ஷாருக்கான், ஜானி பேர்ஸ்டோ, பிரப்சிம்ரன் சிங், பானுகா ராஜபக்சா, ஜித்தேஷ் ஷர்மா, ராஜ் பவா, ரிஷி தவான், லியாம் லிவிங்ஸ்டோன், அதர்வா டைட், அர்ஷ்தீப் சிங், பல்தேஜ் சிங், நேதன் எல்லிஸ், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், ஹர்ப்ரீத் ப்ரார்.

கையிருப்பு தொகை - ரூ.32.2 கோடி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

தக்கவைத்த வீரர்கள் - சஞ்சு சாம்சன் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷிம்ரான் ஹெட்மயர், தேவ்தத் படிக்கல், ஜோஸ் பட்லர், த்ருவ் ஜுரெல், ரியான் பராக், பிரசித் கிருஷ்ணா, டிரெண்ட் போல்ட், ஒபெட் மெக்காய், நவ்தீப் சைனி, குல்தீப் சென், குல்திப் யாதவ், ரவிச்சந்திரன் அஷ்வின் யுஸ்வேந்திர சாஹல், கேசி காரியப்பா.

கையிருப்பு தொகை - ரூ.13.2 கோடி

குஜராத் டைட்டன்ஸ் அணி:

தக்கவைத்த வீரர்கள் - ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ஷுப்மன் கில், டேவிட் மில்லர், அபினவ் மனோகர், சாய் சுதர்சன், ரிதிமான் சஹா, மேத்யூ வேட், ரஷீத் கான், ராகுல் டெவாட்டியா, விஜய் சங்கர், முகமது ஷமி, அல்ஸாரி ஜோசஃப், யஷ் தயால், பிரதீப் சங்வான், தர்ஷன் நால்கண்டே, ஜெயந்த் யாதவ், சாய் கிஷோர், நூர் அகமது.

கையிருப்பு தொகை - ரூ.19.25 கோடி

ரஞ்சி டிராபி: வெறித்தனமா இலக்கை விரட்டிய ஜெகதீசன், சுதர்சன்.. ஹைதராபாத்துக்கு தோல்வி பயம் காட்டிய தமிழ்நாடு

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி:

தக்கவைத்த வீரர்கள் - கேஎல் ராகுல் (கேப்டன்), ஆயுஷ் பதானி, கரண் ஷர்மா, மனன் வோரா, குயிண்டன் டி காக், மார்கஸ் ஸ்டோய்னிஸ், கிருஷ்ணப்பா கௌதம், தீபக் ஹூடா, கைல் மேயர்ஸ், க்ருணல் பாண்டியா, ஆவேஷ் கான், மோசின் கான், மார்க் உட், மயன்க் யாதவ், ரவி பிஷ்னோய்.

கையிருப்பு தொகை - ரூ.23.35 கோடி
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios