PAK vs ENG: பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்யுமா இங்கிலாந்து? 3வது டெஸ்ட் போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்
பாகிஸ்தான் - இங்கிலாந்து இடையேயான 3வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. ராவல்பிண்டி மற்றும் முல்தானில் நடந்த முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அணி 2-0 என டெஸ்ட் தொடரை வென்றுவிட்டது.
கடைசி டெஸ்ட் போட்டி நாளை(டிசம்பர் 17) கராச்சியில் தொடங்குகிறது. முதல் 2 போட்டிகளில் தோற்ற பாகிஸ்தான் அணி ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 6ம் இடத்திற்கு பின் தங்கியது. கடைசி போட்டியிலும் பாகிஸ்தானை வீழ்த்தி பாகிஸ்தான் மண்ணில் அந்த அணியை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் இங்கிலாந்து அணியும், ஒயிட்வாஷ் ஆகாமல் கடைசி போட்டியில் ஜெயித்து ஆறுதல் வெற்றி பெறும் முனைப்பில் பாகிஸ்தானும் களமிறங்குகின்றன.
IPL 2023 Mini Auction: 10 ஐபிஎல் அணிகளும் தக்கவைத்த வீரர்கள்.. கையிருப்பு தொகை விவரம்
இந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். பாகிஸ்தான் வீரர் அசார் அலி இந்த தொடருடன் ஓய்வு பெறுவதால் கடைசி போட்டியில் அவருக்கு ஆட வாய்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தேச பாகிஸ்தான் அணி:
அப்துல்லா ஷாஃபிக், இமாம் உல் ஹக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), அசார் அலி, சௌத் ஷகீல், முகமது நவாஸ், ஃபஹீம் அஷ்ரஃப், ஜாஹித் மஹ்மூத், முகமது அலி, அப்ரார் அகமது.
ரிஷப் பண்ட்டின் உடல் எடை தான் அவரது பலவீனம்.. உடல் எடையை குறைத்தே ஆகணும்..! சல்மான் பட் ஓபன் டாக்
உத்தேச இங்கிலாந்து அணி:
ஜாக் க்ராவ்லி, பென் டக்கெட், ஆலி போப் (விக்கெட் கீப்பர்), ஜோ ரூட், ஹாரி ப்ரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), வில் ஜாக்ஸ், ஆலி ராபின்சன், ஜாக் லீச், மார்க் உட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.