தாய்லாந்தில் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 6 தங்கம், 12 வெள்ளி மற்றும் 9 வெண்கலத்துடன் 27 பதக்கங்களுடன் 3ஆவது இடம் பிடித்துள்ளது.

தாய்லாந்தின் தலைநகர் பேங்காக்கில் 25ஆவது ஆண்டுக்கான ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்தது. கடந்த 12 ஆம் தேதி தொடங்கிய இந்த சாம்பியன்ஷிப் போட்டி நேற்றுடன் நிறைவடைந்தது. ஆசிய தடகள சங்கத்தின் பொன்விழா ஆண்டாக இந்த ஆண்டு கொண்டாடப்பட்டது. இதில், தொடக்கம் முதல் இந்தியா ஆதிக்கம் செலுத்தி வந்தது. முதல் நாள் போட்டியில் இந்திய ஓட்டப்பந்தய வீரரான அபிஷேக் பால் வெண்கல பதக்கம் வென்று அசத்தினார்.

டெஸ்ட் வரலாற்றில் சிறந்த சுழல் ஜோடி; 495 விக்கெட்டுகள் எடுத்து சாதித்த ரவிச்சந்திரன் அஸ்வின் – ரவீந்திர ஜடேஜா!

இரண்டாவது நாளில் இந்திய வீராங்கனை ஜோதி பெண்கள் 100 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் தங்கம் வென்றார். அதேபோல இந்திய வீரரான அப்துல்லா ஆண்கள் ட்ரிபிள் ஜம்ப் போட்டியில் தங்கம் வென்று அசத்தினார். அஜய் குமார் சரோஜ் என்பவரும் ஆண்களுக்கான 1500 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் தங்கம் வென்றார்.

வரலாற்று சாதனை படைத்த மார்க்கெட்டா வோண்ட்ரூசோவா: முதல் முறையாக விம்பிள்டன் சாம்பியன்!

ஐஸ்வர்யா கைலாஷ் மிஸ்ரா பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் வெண்கலம் வெல்ல, தேஜாஸ்வின் சங்கர் ஒரு வெண்கலம் பெற்றிருந்தார். இந்நிலையில் இன்று நடந்த மூன்றாம் நாள் ஆட்டத்தில் தஜீந்தர் தூர் ஷார்ட்புட் போட்டியில் தங்கம் வென்று அசத்தியுள்ளார். அதேபோல பருல் சவுத்ரி 300 மீட்டர் Steeple Chase போட்டியில் தங்கம் வென்றுள்ளார். மேலும் இந்திய வீரர் ஷைலு சிங் நீளம் தாண்டுதலில் வெள்ளி பெற்று அசத்தியுள்ளார்.

மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் ஜானி பேர்ஸ்டோவை ஸ்டெம்பிங் செய்வேன் - இங்கிலாந்து அணியை எச்சரித்த அலெக்ஸ் கேரி!

4ஆவது நாளில் நடந்த ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர் வெள்ளிப் பதக்கம் வென்றார். அதோடு, வரும் 2024 ஆம் ஆண்டு பாரிஸில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இதே போன்று ராஜேஷ் ரமேஷ், ஐஸ்வர்யா கைலாஷ் மிஷ்ரா, அமோஷ் ஜகோப் மற்றும் சுபா வெங்கடேசன் ஆகியோர் கொண்ட கலப்பு 4x400 மீ தொடர் ஓட்டத்தில் தங்கம் வென்று புதிய சாதனை படைத்துள்ளது.

ஆசிய விளையாட்டு போட்டியில் இடமில்லை: நம்பி ஏமாந்து போன ஷிகர் தவான் என்ன செய்யப் போகிறார்?

இந்திய தடகள வீரர்களான அனில் சர்வேஷ் குஷாரே மற்றும் ஸ்வப்னா பர்மன் ஆகியோர் முறையே ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் மற்றும் பெண்களுக்கான ஹெப்டத்லான் போட்டிகளில் வெள்ளிப் பதக்கங்களை வென்றனர். தமிழரசன் சந்தோஷ் குமார் ஆண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்றார்.

5ஆவது மற்றும் கடைசி நாளாக நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், மகளிருக்கான 200 மீட்டர் தடகளப் போட்டியில் ஜோதி யார்ராஜி வெள்ளி கைப்பற்றினார். இதே போன்று மகளிருக்கான 5000 மீட்டர் தடகளப் போட்டியில் பருல் சவுத்ரி வெள்ளிப்பதக்கம் வென்றார். ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் மணு டிபி வெள்ளி கைப்பற்றினார். மகளிருக்கான ஷாட்புட்டில் அபா கதுவா வெள்ளிப் பதக்கம் வென்றார்.

ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு: கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட்!

இதே போன்று ஆண்களுக்கான 400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் இந்திய அணி வெள்ளி கைப்பற்றியது. மகளிருக்கான 800 மீட்டர் தடகள இறுதிப் போட்டியில் சந்தா வெள்ளி வென்றார். மேலும், ஆண்களுக்கான 800 மீட்டர் தடகள இறுதிப் போட்டியில் கிர்ஷன் குமார் வெள்ளி கைப்பற்றினார். 20 கிமீ ரேஸ் வாக்கில் பிரியங்கா கோஸ்வாமி வெள்ளி வென்றார். 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் மகளிர் அணி குழுவாக வென்று வெண்கலம் வென்றது எனப்து குறிப்பிடத்தக்கது.

இறுதியாக 6 தங்கம், 12 வெள்ளி மற்றும் 9 வெண்கலத்துடன் இந்தியா 3ஆவது இடம் பிடித்தது. 16 தங்கம், 11 வெள்ளி மற்றும் 10 வெண்கலத்துடன் ஜப்பான் முதலிடம் பிடித்துள்ளது.

Scroll to load tweet…