ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு: கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட்!
2023 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய விளையாட்டு 2023 போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 19ஆவது ஆசிய விளையாட்டு போட்டி வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி முதல் அக்டோபர் 8ஆம் தேதி வரையில் சீனாவின் ஹாங்சோவில் நடக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மகாராஷ்டிர வீரர் ருதுராஜ் கெய்க்வாட், ரிங்கு சிங் மற்றும் பிரப்சிம்ரன் ஆகியோரைக் கண்ட இரண்டாவது வரிசை வீரர்கள் அணியில் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் தான் அணியை வழிநடத்த உள்ளனர். ஜிதேஷ் ஷர்மா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் திரும்ப அழைக்கப்பட்டதன் மூலம் ரிங்கு சிங் இந்திய அணியில் முதல் முறையாக இடம் பெற்றுள்ளார்.
தாமதமாகும் ஆசிய கோப்பை 2023 அட்டவணை; BCCI vs PCB மீண்டும் மீட்டிங்!
நடந்து முடிந்த ஐபிஎல் 16ஆவது சீசன்களில் தங்களது சிறப்பான ஆட்டத்தால் ரசிகர்களை கவர்ந்த இளம் வீர்ரகள் இந்த ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர். இந்த ஆசிய விளையாட்டு போட்டி மூலமாக இந்திய அணி அடுத்து வரவுள்ள டி20 உலகக் கோப்பைக்கான இளம் வீரர்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஓபனிங் வீரரும், மகாராஷ்டிரா பிரீமியர் லீக் தொடரில் இடம் பெற்ற புனேரி பாப்பா அணியின் கேப்டனாக அனுபவம் பெற்றார்.
WTC Final 2023க்கு என்னை ஏன் எடுக்கவில்லை? சொல்லாமல் புரிய வைத்த ரவிச்சந்திரன் அஸ்வின்!
ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறாத வீரர்கள் ஆசிய விளையாட்டு போட்டிகள் கொண்ட இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர்.
19ஆவது ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய அணி:
ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ராகுல் திரிபாஃதி, திலக் வர்மா, ரிங்கு சிங், ஜித்தேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ரவி பிஷ்னாய், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், ஷிவம் மவி, ஷிவம் துபே, பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்).
இன்னிங்ஸ், 141 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்திய இந்தியா!