தாமதமாகும் ஆசிய கோப்பை 2023 அட்டவணை; BCCI vs PCB மீண்டும் மீட்டிங்!
ஆசிய கோப்பை 2023 அட்டவணை தயார் நிலையில் இருக்கிறது என்று அறிவிப்பு வெளியான நிலையில், வெளியிடுவதில் மீண்டும் தாமதம் ஏற்பட்டுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் தொடரைத் தொடர்ந்து ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் நடக்க இருக்கிறது. ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் நடத்துகிறது. ஆனால், இந்தியா, பாகிஸ்தான் செல்ல மறுப்பு தெரிவித்து வரும் நிலையில், ஹைபிரிட் மாடல் போட்டி நடத்தப்படும் என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்தது.
WTC Final 2023க்கு என்னை ஏன் எடுக்கவில்லை? சொல்லாமல் புரிய வைத்த ரவிச்சந்திரன் அஸ்வின்!
அதாவது, 2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகளை பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடத்த ஆசிய கோப்பை கிரிக்கெட் கவுன்சில் முடிவு செய்ததாக அறிவித்தது. அதன்படி மொத்தமுள்ள 13 போட்டிகளில் 4 போட்டிகள் மட்டும் பாகிஸ்தானிலும், எஞ்சிய இந்தியா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட 9 போட்டிகள் இலங்கையிலும் நடத்தப்படும் என்று அறிவித்தது.
இன்னிங்ஸ், 141 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்திய இந்தியா!
பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஜகா அஷ்ரஃபை கடந்த சில தினங்களுக்கு முன்பு சந்தித்து பேசினர். இந்த சந்திப்பில் தான் ஆசிய கோப்பை 2023 அட்டவணை உறுதி செய்யப்பட்டது. அதன்படி, மொத்தமுள்ள 13 போட்டிகளில் 4 போட்டிகள் மட்டும் பாகிஸ்தானிலும், எஞ்சிய இந்தியா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட 9 போட்டிகள் இலங்கையிலும் நடத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டது என்று ஐபிஎல் தலைவர் அருண் துமால் கூறினார்.
இந்தியா – தென் ஆப்பிரிக்கா தொடருக்கான அட்டவணை வெளியீடு!
எனினும், ஆசிய கோப்பை 2023 தொடருக்கான அட்டவணை அறிவிப்பதில் மீண்டும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நாளை துபாயில் நடக்க உள்ள ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய மூத்த உறுப்பினர்கள், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் பிரதிநிதிகளை சந்தித்து பேச உள்ளனர்.
பாகிஸ்தான் மற்றும் நேபாள் அணிகளுக்கு இடையிலான போட்டியை பாகிஸ்தானில் நடத்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஒப்புக் கொண்டது. ஆனால், முன்னாள் நிர்வாகக் குழுத் தலைவர் நஜாம் சேத்தி மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அதிகாரிகளுக்கு இடையேயான தொடர் விவாதத்தைத் தொடர்ந்து பாகிஸ்தான் மூன்று போட்டிகளை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டு பின் 4ஆவது போட்டியையும் சேர்த்தது என்று அதிகாரிகள் கூறினர்.
கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த ஃபீல்டர்களாக வலம் வந்த கிரிக்கெட் வீரர்கள்!
இதற்கு முக்கிய காரணம், இலங்கையில் போட்டிகள் நடத்தப்பட்டால் நிதி சிக்கல் ஏற்படும் என்று பாகிஸ்தான் அதிகாரிகள் கூறினர். கடந்த ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த ஆசியக் கோப்பையில் இந்தியா வருமானம் ஈட்டியதற்கு சமமான தொகையைப் பெறுவதை உறுதி செய்வதற்காக, சேத்தி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக பணியாற்றியபோதும், பாகிஸ்தான் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியது என்பது குறிப்பிடத்தக்கது.