Asianet News TamilAsianet News Tamil

WPL 2023: 36 பந்தில் 99 ரன்கள்.. ஒரு ரன்னில் சதத்தை தவறவிட்ட டிவைன்! குஜராத்தை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி

மகளிர் பிரீமியர் லீக்கில் குஜராத் ஜெயிண்ட்ஸ் நிர்ணயித்த 189 ரன்கள் என்ற இலக்கை 16வது ஓவரிலேயே அடித்து ஆர்சிபி அணி அபார வெற்றி பெற்று, இந்த சீசனில் 2வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
 

wpl 2023 sophie devine amazing batting helps rcb to beat gujarat giants and register second win after consecutive 4 defeats
Author
First Published Mar 18, 2023, 10:54 PM IST

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் ஆர்சிபி - குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் நடந்தது. முதல் 4 போட்டிகளிலும் தோல்வியை தழுவிய ஆர்சிபி அணி, கடந்த போட்டியில் வெற்றி பெற்று, 2வது வெற்றியை பெறும் முனைப்பில் குஜராத் ஜெயிண்ட்ஸை எதிர்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி:

சோஃபி டன்க்லி, லாரா வோல்வார்ட், ஹர்லீன் தியோல், ஆஷ்லே கார்ட்னெர், தயாளன் ஹேமலதா, சபினேனி மேகனா, சுஷ்மா வெர்மா (விக்கெட் கீப்பர்), கிம் கார்த், ஸ்னே ராணா (கேப்டன்), டனுஜா கன்வார், அஷ்வனி குமாரி. 

NZ vs SL: 2வது டெஸ்ட்டில் வில்லியம்சன், நிகோல்ஸ் இரட்டை சதம்..! மெகா ஸ்கோர் அடித்து நியூசிலாந்து டிக்ளேர்

குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி:

சோஃபி டிவைன், ஸ்மிரிதி மந்தனா (கேப்டன்), எலைஸ் பெர்ரி, ஹீதர் நைட், ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), கனிகா அஹுஜா, ஷ்ரேயங்கா பாட்டீல், திஷா கசட், மேகன் ஸ்கட், ஆஷா சோபனா, பிரீத்தி போஸ்.

முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியின் தொடக்க வீராங்கனை டன்க்லி 16 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீராங்கனையான லாரா வோல்வார்ட் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். 42 பந்தில் லாரா 68 ரன்கள் அடித்தார். சபினேனி மேகனா 31 ரன்கள் அடித்தார். ஆஷ்லே கார்ட்னெர் 26 பந்தில் 41 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். பின்வரிசையில் ஹேமலதா 6 பந்தில் 16 ரன்களும், ஹர்லீன் தியோல் 5 பந்தில் 12 ரன்களும் அடிக்க, ஆர்சிபி அணி 188 ரன்களை குவித்தது.

கோலி மாதிரி எத்தனை பேர் வந்தாலும் சச்சின் டெண்டுல்கரை நெருங்கக்கூட முடியாது..! சக்லைன் முஷ்டாக் கருத்து

189 ரன்கள் என்ற சவாலான இலக்கை விரட்டிய ஆர்சிபி அணியின் தொடக்க வீராங்கனையும் கேப்டனுமான ஸ்மிரிதி மந்தனா 31 பந்தில் 37 ரன்கள் அடித்தார். மற்றொரு தொடக்க வீராங்கனையான சோஃபி டிவைன் காட்டடி அடித்தார். பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி வெறித்தனமாக பேட்டிங் ஆடிய டிவைன் 35 பந்தில் 9 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 99 ரன்களை குவித்த நிலையில், 36வது சதமடிப்பார் என்று எதிர்பார்த்தால் துரதிர்ஷ்டவசமாக அவுட்டாகி சத வாய்ப்பை நூழிலையில் தவறவிட்டார். ஆனால் அவரது அதிரடியான பேட்டிங்கால் 16வது ஓவரில் 189 ரன்கள் என்ற இலக்கை அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி அபார வெற்றி பெற்று, இந்த சீசனில் 2வது வெற்றியை பதிவு செய்தது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios