Asianet News TamilAsianet News Tamil

India vs New Zealand:இது ரிவெஞ்சுக்கான காரணம் – 2019 உலகக் கோப்பை அரையிறுதி தோல்விக்கு இந்தியா பழி தீர்க்குமா?

2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்திடம் அடைந்த தோல்விக்கு பழிதீர்க்க இந்திய அணிக்கு சரியான வாய்ப்பு கிடைத்துள்ளது.

Will India avenge 2019 World Cup semi-final defeat? rsk
Author
First Published Nov 15, 2023, 9:36 AM IST | Last Updated Nov 15, 2023, 9:36 AM IST

கடந்த அக்டோபர் 5ஆம் தேதி முதல் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. இதில், இந்தியா, இங்கிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 10 அணிகள் இடம் பெற்று விளையாடின. இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய 4 அணிகள் மட்டுமே அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன.

நெதர்லாந்து கூட 410 அடிப்பது முக்கியமல்ல, நியூசிலாந்து கூட அடிக்கணும் அதுதான் முக்கியம் – ரசிகர்கள் குமுறல்!

இந்த நிலையில் தான் இன்று 15ஆம் தேதி இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் அரையிறுதிப் போட்டி நடக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் இந்தப் போட்டியில் மழை குறுக்கீடு ஏற்பட்டால் ரிசர்வ் டே என்று சொல்லப்படும் அடுத்த நாள் போட்டி நடைபெறும் என்பதை ஐசிசி உறுதி செய்துள்ளது.

Will India avenge 2019 World Cup semi-final defeat? rsk

இது ஒரு புறம் இருந்தாலும், இந்திய அணிக்கு பழி தீர்த்துக் கொள்ள சரியான வாய்ப்பு கிடைத்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடின. இதில், நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 239 ரன்கள் குவித்தது. பவுலிங்கில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்தால் பக்தியுள்ள குழந்தை பிறக்கும் என்று நினைத்தால் அது நடக்காது – அப்துல் ரசாக்!

பின்னர் விளையாடிய இந்திய அணியில் கேஎல் ராகுல், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய 3 வீரர்களும் தலா 1 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது 5 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அடுத்து, 71 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்த இந்திய அணியானது 92 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. கடைசியாக எம்.எஸ்.தோனி மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டனர்.

Will India avenge 2019 World Cup semi-final defeat? rsk

ரவீந்திர ஜடேஜாவும் 77 ரன்களில் ஆட்டமிழக்க, கடைசியாக 2 ரன்கள் ஓட முயற்சித்த தோனி ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். அவர் 50 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். கடைசியாக இந்திய அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 221 ரன்கள் மட்டுமே எடுத்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது.

ஐபிஎல் போன்று மழை பெய்தால் என்ன செய்வது? அரையிறுதி, இறுதிப் போட்டிக்கு ரிசர்வ் டே அறிவிப்பு!

இந்த நிலையில், தான் இந்தியாவிற்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. இன்று பிற்பகல் 2 மணிக்கு நடக்கும் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்தை தோற்கடித்து இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற வேண்டும். அப்படி முன்னேறி சென்றால், தோனிக்கு செய்யும் மரியாதையாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Will India avenge 2019 World Cup semi-final defeat? rsk

இதுவரையில் விளையாடிய 9 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றது பெரிதல்ல. இன்று நடக்கும் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்பதே முக்கியமான ஒன்று. அதுமட்டுமின்றி நியூசிலாந்து அணியை வீழ்த்தி பழிக்கு பழி தீர்க்க வேண்டும்.

பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்துக்கு எவ்வளவு பரிசுத் தொகை தெரியுமா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios