IPL 2023: ஒரே மேட்ச் தான், யாருன்னு காட்டிய லக்னோ; பதிலடி கொடுக்குமா சென்னை சூப்பர் கிங்ஸ்?
கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி வீழ்த்தியதற்கு இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் 2023ல் இன்று நடக்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதுகின்றன. கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் போட்டி என்பதால், ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், இதுவரையில் சென்னை மற்றும் லக்னோ அணிகள் நேருக்கு நேர் மோதிய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியே வெற்றி வாகை சூடியுள்ளது.
கடந்த சீசனில் நடந்த இந்தப் போட்டியில், முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 7 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 19.3ஆவது ஓவரில் 211 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு கூட செல்லவில்லை. ஆனால், லக்னோ அணி எலிமினேட்டர் சுற்றில் தோல்வியடைந்து வெளியேறியது.
கடந்த சீசனில் அடைந்த தோல்விக்கு சென்னை அணி இந்த சீசனில் பழி தீர்த்துக் கொள்ளுமா? அல்லது இந்தப் போட்டியில் தோல்வியடையுமா? என்பதை போட்டியின் போது தெரியவரும். அதுமட்டுமின்றி, லக்னோ அணியில் கேஎல் ராகுல், கைல் மேயர்ஸ், ஆயுஷ் பதானி, ஸ்டாய்னிஸ், நிக்கோலஸ் பூரன், குர்ணல் பாண்டியா ஆகிய நட்சத்திர வீரர்கள் இடம் பெற்றுள்ளன. முதல் போட்டியில் டெல்லி அணியை 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது என்பது குறிப்பிடத்தக்கது.
IPL 2023: வாரி வழங்கிய இம்பேக்ட் பிளேயர்ஸ்: சென்னையின் துஷார் தேஷ்பாண்டே மோசமான சாதனை!