IPL 2023: 1426 நாட்களுக்குப் பிறகு சென்னை திருவிழா: ரெய்னா இல்லாமல் சேப்பாக்கத்தில் களம் காணும் சிஎஸ்கே!
சின்ன தல என்று அழைக்கப்படும் ரெய்னா இல்லாமல் சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் போட்டியில் முதல் முறையாக ருத்துராஜ் கெய்க்வாட் களமிறங்குகிறார்.
ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழாவின் 16ஆவது சீசன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதுகின்றன. கிட்டத்தட்ட 4 வருடம் அதாவது 1426 நாட்களுக்குப் பிறகு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மஞ்சள் நிற சிஎஸ்கே படை களம் காணுகிறது. இதற்கு முன்னதாக கடந்த 2019 ஆம் ஆண்டில் சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களம் கண்டது. அந்த ஆண்டில் தான் எம் எஸ் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் தனது ஓய்வு முடிவை அறிவித்தார்.
IPL 2023: கட்ட துரைக்கு கட்டம் சரியில்ல; தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பி வரும் ரோகித் சர்மா!
ஆனால், அவர் எந்தப் போட்டியிலும் விளையாடாமல் ஓய்வு அறிவித்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியகா இருந்தது. ஆகையால், சென்னை சேப்பாக்கத்தில் தான் கடைசி போட்டியில் விளையாடுவேன். அது எனது கிரிக்கெட் வரலாற்றின் கடைசி போட்டியாக இருக்கும் என்று தோனி அறிவித்தார். ஆனால், அது இந்த ஆண்டாக இருக்குமோ, அடுத்த ஆண்டாக இருக்குமோ என்று கேள்வி வெளியாகி வருகிறது.
IPL 2023: ஐபிஎல் கிரிக்கெட்டில் 50 அரை சதங்கள் அடித்த ஷிகர் தவானை முந்திய கிங் விராட் கோலி!
இது ஒரு புறம் இருந்தாலும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தோனி மேற்கொள்ளும் பயிற்சியை காண்பதற்கே ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. இந்த நிலையில், தான் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி நடக்கிறது. 4 ஆண்டுகளுக்குப் பின், அதாவது கிட்டத்தட்ட 1426 ஆண்டுகளுக்குப் பிறகு சேப்பாக்கம் மைதானத்தில் நட்ககும் போட்டியை காண்பதற்கு ரசிகர்களின் வருகை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
IPL 2023: வாரி வழங்கிய இம்பேக்ட் பிளேயர்ஸ்: சென்னையின் துஷார் தேஷ்பாண்டே மோசமான சாதனை!
இந்தப் போட்டியில் சின்ன தல என்று அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா இல்லாமல் சிஎஸ்கே அணி களமிறங்குகிறது. தோனி அறிவித்த அடுத்த நாளே சுரேஷ் ரெய்னாவும் சர்வதேச போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். எப்படி சின்ன தல இல்லாமல் சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அணி விளையாடுகிறதோ, அதே போன்று ருத்துராஜ் கெய்க்வாட்டும் சேப்பாக்கம் மைதானத்தில் இன்று முதல் முறையாக விளையாடுகிறார்.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2023 தொடரின் முதல் போட்டியில் ருத்துராஜ் கெய்க்வாட் 92 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
IPL 2023 RCB: தோள்பட்டையை பிடித்துக் கொண்டு வெளியேறிய ஆர்சிபி வீரர் ரீஸ் டாப்ளி!