IPL 2023: கவுதம், மார்க் வுட், கைல் மேயர்ஸ் வைத்து திட்டம் போடும் லக்னோ; சேப்பாக்கத்தில் ஆக்‌ஷன் காட்சி தான்

சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர்களான கிருஷ்ணப்பா கவுதம் மற்றும் மார்க் வுட் ஆகியோர் லக்னோ அணியில் இடம் பெற்றுள்ள நிலையில், சிஎஸ்கே அணிக்கு எதிராக சிறப்பாக பந்து வீசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

Lucknow plans to have Gowtham, Mark Wood and Kyle Mayers defeat CSK in IPL 2023 Chepauk Stadium

ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஏற்கனவே முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. தற்போது 2ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது சொந்த மைதானமான சென்னை சேப்பாக்கத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு கிட்டத்தட்ட 1426 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கம் மைதானத்தில் களமிறங்குகிறது.

IPL 2023: 1426 நாட்களுக்குப் பிறகு சென்னை திருவிழா: ரெய்னா இல்லாமல் சேப்பாக்கத்தில் களம் காணும் சிஎஸ்கே!

ஆனால், கைல் மேயர்ஸ், மார்க் வுட், கிருஷ்ணப்பா கவுதம, நிக்கோலஸ் பூரன், குர்ணல் பாண்டியா ஆகியோர் கொண்ட பலம் வாய்ந்த லக்னோ அணியை எதிர்கொள்வது கொஞ்சம் கஷ்டம் தான். ஏற்கனவே டெல்லிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் குவித்தது. அதோடு, 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

IPL 2023: கட்ட துரைக்கு கட்டம் சரியில்ல; தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பி வரும் ரோகித் சர்மா!

ஆனால், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் களம் காணும் சென்னை அணையில் ஜடேஜா, சாண்ட்னர், மொயீன் அலி என்று சுழற்பந்து வீச்சாளர்கள் இருக்கின்றனர். முதலில் சென்னை அணி ஆடினால், இம்பேக்ட் பிளேயராக லெக் ஸ்பின்னர் பிரசாந்த் சொலாங்கியும் களமிறக்கப்பட வாய்ப்புள்ளது. 2ஆவது பேட்டிங் என்றால், பிரதான லெவனிலேயே பிரசாந்த் சொலங்கி இருக்க வாய்ப்புகள் அதிகம். இதே போன்று லக்னோ அணியில் உள்ள ரவி பிஷ்னாய், கிருஷ்ணப்பா கவுதம், மார்க் வுட், கைல் மேயர்ஸ் ஆகியோர் லக்னோ அணிக்கு சிறப்பாக பந்து வீசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

IPL 2023: ஐபிஎல் கிரிக்கெட்டில் 50 அரை சதங்கள் அடித்த ஷிகர் தவானை முந்திய கிங் விராட் கோலி!

இதைவிட முக்கியமாக கடந்த போட்டியில் இம்பேக்ட் பிளேயராக கிருஷ்ணப்பா கவுதம் களமிறக்கப்பட்ட நிலையில், இந்த முறையில் அமித் மிஸ்ரா இம்பேக்ட் பிளேயராக களமிறங்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இப்படி மாறி மாறி பலம் வாய்ந்த அணியாக சென்னை மற்றும் லக்னோ திகழ்வதால், இன்றைய போட்டியில் பரபரப்பும் அதிரடியும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சேப்பாக்கம் சென்னையின் கோட்டையாக இருப்பதால், லக்னோ அணியால் ஜெயிப்பது கொஞ்சம் கஷ்டமான செயல் தான்.

IPL 2023: வாரி வழங்கிய இம்பேக்ட் பிளேயர்ஸ்: சென்னையின் துஷார் தேஷ்பாண்டே மோசமான சாதனை!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios