விராட் கோலியின் கிரிக்கெட் வாழ்க்கையில் 2023 உலகக் கோப்பை தான் கடைசி உலகக் கோப்பையா?
உலகக் கோப்பை 2023 தொடர் தான் விராட் கோலிக்கு கடைசி உலகக் கோப்பை தொடராக இருக்க கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா நடத்தும் 2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை தொடர் வரும் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19 ஆம் தேதி வரையில் நடக்கிறது. இதற்கான அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்தியா உள்பட மொத்தம் 8 அணிகள் உலகக் கோப்பைக்கு நேரடியாக தகுதி பெற்ற நிலையில், இலங்கை அணி உலகக் கோப்பை தகுதிச் சுற்று போட்டியின் மூலமாக உலகக் கோப்பைக்கு 9ஆவது அணியாக தகுதி பெற்றது. கடைசி ஒரு இடத்திற்காக ஸ்காட்லாந்து மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகள் போராடி வருகின்றன.
துப்பாக்கி ஏந்திய செக்யூரிட்டி கார்டை பைக்கில் ஏற்றி வந்த தோனி: வைரலாகும் வீடியோ!
கடந்த 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை சச்சின் டெண்டுல்கருக்காக கைப்பற்றிய நிலையில், இந்த உலகக் கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி விராட் கோலிக்காக கைப்பற்ற வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் அதிரடி தொடக்க வீரர் வீரேந்திர சேவாக் கூறியுள்ளார்.
இந்த நிலையில், இந்த 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பையே விராட் கோலிக்கு கடைசி உலகக் கோப்பையாக இருக்க கூடும் என்று சொல்லப்படுகிறது. கடந்த 2008 ஆம் ஆண்டு நடந்த அண்டர் 19 உலகக் கோப்பை தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இதில் விராட் கோலி இடம் பெற்று விளையாடினார். இது அவரது முதல் உலகக் கோப்பை. அதன் பிறகு இந்திய அணியில் இடம் பெற்ற கோலி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் 2ஆவது உலகக் கோப்பையில் விளையாடினார். 2011 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையில் இந்தியா சாம்பியனானது. 2019 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையில் இந்தியா அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்திடம் தோல்வி அடைந்து வெளியேறியது.
4ஆவது இடம் யாருக்கு? முதல் தகுதிச் சுற்றில் லைகா கோவை கிங்ஸ் – திண்டுக்கல் டிராகன்ஸ் பலப்பரீட்சை!
தற்போது தனது 35ஆவது வயதில் 3ஆவது உலகக் கோப்பையில் விளையாட உள்ள கோலி அடுத்ததாக 4ஆவது உலகக் கோப்பையில் விளையாடுவாரா என்பது தான் தற்போதைய கேள்வியாக உள்ளது. வரும் 2027 ஆம் ஆண்டு அடுத்து உலகக் கோப்பை தொடர் நடக்கிறது. அப்போது விராட் கோலி கிட்டத்தட்ட 39ஆவது வயதை நெருங்கிவிடுவார்.
ஆகையால், இந்த உலகக் கோப்பை தொடர் தான் விராட் கோலியின் கடைசி உலகக் கோப்பை தொடராக இருக்க கூடும். இதைத் தான் வீரேந்திர சேவாக்கும் மறைமுகமாக சொல்லியிருக்கிறார். ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி விராட் கோலிக்காக உலகக் கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்று கூறியிருந்தார்.
கபில் தேவ் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ஜடேஜா; வெஸ்ட் இண்டீஸ் ODI Squadல் இடம் பெறுவாரா?
இவ்வளவு ஏன், ஐபிஎல் கிரிக்கெட்டில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விராட் கோலியுடன் இணைந்து விளையாடிய கிறிஸ் கெயில், இது விராட் கோலியின் கடைசி உலகக் கோப்பையாக இருக்காது. அவர் அடுத்த உலகக் கோப்பை கிரிக்கெட்டிலும் விளையாடுவார் என்று கூறியுள்ளார். கோலிக்காகவே, ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்த முறை உலகக் கோப்பையை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
5ஆவது போட்டியில் தோற்று 2ஆவதாக வெளியேறிய சேலம் ஸ்பார்டன்ஸ்!