4ஆவது இடம் யாருக்கு? முதல் தகுதிச் சுற்றில் லைகா கோவை கிங்ஸ் – திண்டுக்கல் டிராகன்ஸ் பலப்பரீட்சை!

டிஎன்பிஎல் தொடரின் முதல் தகுதிச் சுற்றுப் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Who is the 4th place? Lyca Kovai Kings vs Dindigul Dragons in the first qualifying round in TNPL 2023

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 26ஆவது போட்டி நேற்று நடந்தது. இதில், திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதின. திருநெல்வேலியில் உள்ள இந்திய சிமெண்ட் நிறுவன மைதானத்தில் நடந்தது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழந்து 160 ரன்கள் எடுத்தது.

த்ரோவில் பந்து பேட்டில் பட்டு, பவுண்டரி சென்றால் ஓகே, இப்போ ஜானி பேர்ஸ்டோவுக்கு அவுட் இல்லையா?

இதையடுத்து 161 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட திண்டுக்கல் டிராகன்ஸ் அணி விளையாடியது. இதில், கேப்டன் பாபா இந்திரஜித் அதிரடியாக ஆடி 50 பந்துகளில் 9 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உள்பட 83 ரன்கள் சேர்த்தார். இறுதியாக திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 18.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் குவித்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டி20 உலகக் கோப்பை 2024 மீது குறி வைக்கும் டீம் இந்தியா; ஓய்வில்லாமல் விளையாட ரெடியா?

இந்த வெற்றியின் மூலமாக திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 7 போட்டிகளில் விளையாடி 6ல் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் 2ஆவது இடத்தில் உள்ளது. இதே போன்று லைகா கோவை கிங்ஸ் அணி 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. நெல்லை ராயல் கிங்ஸ் அணி 6 போட்டிகளில் விளையாடி 4ல் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தில் உள்ளது.

ஆனால், 4ஆவது இடத்திற்கான ரேஸில் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ், சீகம் மதுரை பாந்தர்ஸ் மற்றும் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் உள்ளன. சேப்பாக்கம் மற்றும் மதுரை அணிகள் 3 போட்டிகளில் 3 வெற்றி பெற்றுள்ளன. திருப்பூர் அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

கபில் தேவ் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ஜடேஜா; வெஸ்ட் இண்டீஸ் ODI Squadல் இடம் பெறுவாரா?

இன்னும் 2 போட்டிகள் உள்ள நிலையில், மதுரை மற்றும் திருச்சி அணிகள் தோற்று, திருப்பூர் அணி வெற்றி பெற்றால் 4ஆவது இடத்திற்கு வாய்ப்பிருக்கிறது. ஆனால், அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். அப்படி வெற்றி பெற்றால் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் 5ஆவது இடத்திற்கு தள்ளப்படும். ஏற்கனவே பா11சி திருச்சி மற்றும் சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் டிஎன்பிஎல் தொடரிலிருந்து வெளியேறியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, வரும் 7ஆம் தேதி லைகா கோவை கிங்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் முதல் குவாலிஃபையர் சுற்றில் மோதுகின்றன.

5ஆவது போட்டியில் தோற்று 2ஆவதாக வெளியேறிய சேலம் ஸ்பார்டன்ஸ்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios